Tuesday, February 17, 2009


ஆயிஸா(ரழி) அவர்கள் தனது திருமண செய்தியை வெளிப்படுத்தியுள்ள இவ்வறிவிப்புகள் மிக அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாகும். இவ்வறிவிப்புகள் அனைத்திலும் தனது திருமணத்தை ஓர் செய்தியாக ஆயிஸா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்களே தவிர அபூர்வமாக நிகழ்ந்த சம்பவமாக குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திலெடுத்து எனது விளக்கம் முழுதையும் கவனமாக அறிவிற்கு உட்படுத்துங்கள். உண்மையும், சத்தியமும் பேசப்படும் தளங்கள் அனைத்திலும் கருத்துப்பறிமாற்றப்பகுதி திறந்தே இருக்கும் என்பதை அறியத்தருவதுடன் அவ்விதிகளுக்குட்பட்டே இத்தளமும் இருக்கும் என்ற உறுதியையும் தருகிறேன்.
நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் குடும்ப உறவு கொண்டார்கள்.
அறிவிப்பவர்-ஆயிஸா(ரழி)[புஹாரி-3894,5133, 5134, 5156, 5158, 5160.]
கட்டுரையினுள் அடங்கியவைகள்.

-01-இத்திருமணம் மூலம் ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகள்.
-02-லௌகீக தன்மையிலிருந்து சமூக நலப் பார்வை.
-03-இஸ்லாத்தின் திருமணம் சட்ட வரையறை.
-04-உங்களது அறிவுக்கு சவால் தரும் சிந்தனையை தூண்டும் கேள்வி.

உள்ளடக்கத் துளிகள்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்கள் சிறு வயதிலேயே
முழுமையான பெண்களாக வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை
இக்கட்டுரை மிகத்தெளிவாக உறுதி செய்கிறது."
 

"இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும்
திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை
இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை
எம்மிடமில்லை. அது அவனது ஆற்றலுக்குட்பட்ட விடயம். இஸ்லாம் முக்காலமும்
உணர்ந்த மார்க்கமேயன்றி முட்டாள்தனமான மார்க்கமல்ல என பறைசாற்ற
இதுவும் துணை நிற்கிறது."

 
"இவைகளிலிருந்து வரையறுக்கப்பட்ட இவ்வுலக வாழ்வில் மனிதர்களுக்காக
இறைவன் ஏற்படுத்தித்தந்துள்ள லௌகீக நன்மைகளை மனிதர்களிடமிருந்து
பறிக்கும் அடக்குமுறையாளர்களின் அடிப்படைவாத திணிப்பே திருமணத்திற்கு
வயது வரம்புகளை இடுவதும் மறு திருமணத்தை எதிர்ப்பதும், சந்நியாசத்தையும்,
பிரம்மச்சாரியத்தையும் இறைவனின் பெயரால் ஊக்குவிப்பதும் என்பதையும்
உங்களது அறிவு சரி கண்டிருக்கும் என நம்புகிறேன்."
 

இத்திருமணம் இறைவனது ஏற்பாடென்பதற்கான மிகத்தெளிவான ஆதாரங்கள்[புகாரி-5078,7012] உள்ளதால் இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

இருந்தும் ஏக இறைவன் ஒருவனே என்பதையும் அவனது இறுதித்தூதரே முஹம்மத்(ஸல்)அவர்கள் என்ற உண்மையையும் உறுதிப்படுத்த இவ்வாய்வுகளும் எமக்கு துணை நிற்கும் என்பதால் அல்லாஹ் கொடுத்த அறிவைக்கொண்டு நாம் ஆய்வு செய்வோம்.

-01-இத்திருமணம் மூலம் ஏக இறைவனான அல்லாஹ் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகள்.முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா(ரழி)அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.
  • ஆயிஸா(ரழி) அவர்களே, நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு பின்னிருந்த மனைவியர்களில் மிக நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். இக்காலங்களில் ஆண்களுக்கான சட்ட விளக்கங்களை வழங்க பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்கள் வாழ்ந்துள்ள நிலையில் பெண்கள் எதிர்கொண்ட புதுப்புது சந்தேகங்களுக்கான சட்ட விளக்கங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழியில் ஆயிஸா(ரழி) அவர்கள் மட்டுமே துணை நின்றுள்ளார்கள்.

  • முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை சம்பவங்களான ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர்களில் இவர்கள் ஒருவராகவும் மேலும் பெண்ணியல் மற்றும் குடும்பவியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவர்களே முதன்மையானவராகவும் உள்ளார்.

  • நபி(ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா(ரழி) அவர்களே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தினது பலன்களை இஸ்லாம் இன்றளவும் அனுபவிக்கின்றது. (இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.)
இஸ்லாமிய சட்டவாக்க தொகுப்பிலும் இஸ்லாத்தை பூரணத்துவமடடையச் செய்வதிலும் இத்திருமணத்தினதும் ஆயிஸா(ரழி) அவர்களின் பங்களிப்பினதும் அவசியம் எந்தளவு இருந்துள்ளது என்பதை அறிய மேலுள்ள சான்றுகளே போதும் என கருதுகிறேன்.

அடுத்து மிக கூர்மையாக நோக்க வேண்டிய முக்கிய விடயமொன்றை பார்ப்போம்;
இஸ்லாம் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களுக்கு தங்களது கருத்துகளை முன்வைக்கும் உரிமையை கொடுத்ததுடன் நில்லாது அதையே அவர்களது கடமையாக எதிர்பார்த்தும் நின்றது. இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தமது திருமணங்களின் திருப்தியற்ற தன்மையினை இவர்களில் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தாலும் கூட; உலகின் பெரும் சாம்ராஜ்யமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துணை கொண்டு (பொருளாதார பலத்தால் அல்ல) மன உறுதிமிக்க நம்பிக்கையாளர்களால் கட்டியெழுப்பியிருந்த இஸ்லாம் அந்நம்பிக்கையாளர்களின் மன உறுதியைத் தகர்க்கச்செய்து சிதறுண்டிருக்க வழிகோளியிருக்கும். இதுவும் கூட அல்லாஹ் பகிரங்கப்படுத்தியுள்ள இறையத்தாட்சிகளில் ஒன்றே எனலாம்.
-02-லௌகீக தன்மையிலிருந்து சமூக நலப் பார்வை.இனி இன்றைய சமூகப் பார்வையை இத்திருமண விடயத்தில் செலுத்துவோம். இறைவன் ஒரு பெண்ணை குழந்தை பேற்றுக்கு தயார்படுத்திவிட்டான் என்பதை விஞ்ஞான ரீதியாக அறிவிப்பதே பெண் "பருவமடைதல்" என்பதாகும். ஆண் உட்பட உயிரினங்கள் அனைத்திற்குமான அடிப்படையலகு இதுவே. இதனை சந்தேகமில்லாது தெளிந்த அறிவுடன் ஏற்று இவ்வுலகில் நாமாக உருவாக்கிக்கொண்ட வேறெந்த கொள்கைகளுக்கும் சம்பிரதாய சடங்குகளுக்கும் எமது தலையில் இடம் கொடுக்காது சிந்திப்போமாயின், பருவமடைந்த பெண்ணுக்கு சிறு பராயத்தில் திருமணம் செய்யப்படுவது தவறானதாக கருதப்பட இரண்டு காரணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.
  • உடல் வளர்ச்சி போதாமை.
  • முதிர்ச்சியற்ற அறிவு நிலை.
இவ்விரண்டு நிலைகளையுமே நாம் ஆயிஸா (ரழி) அவர்களது விடயத்தில் பொருத்தி பார்க்க வேண்டும்; ஆம் வரலாறுகளை ஆராய வேண்டும்.

உடல் வளர்ச்சி ஆய்வு.

(I)நபி (ஸல்) அவர்களது தோழர்கள் நபியவர்களிடம் "நீர் உண்மையில் இறைவனது தூதர்தானா? அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது தானா?" [ஆதாரம்-புஹாரி:63,92] என்ற கேள்விகளைக்கூட திரும்பத் திரும்ப கேட்கத் தயங்காதவர்கள் இத்திருமணம் குறித்து எங்கும் வினவியதாக அறியக் கிடைக்கவில்லை.

(II)அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்லாயிரக்கணக்கான செய்திகளை உலகிற்கு அறிவித்தவரும் தனது திருமண வயதையும் அறிவித்தவருமான ஆயிஸா(ரழி)அவர்கள் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் வினவவோ அறிவிக்கவோ முயற்சிக்கவில்லை.

இவைகளைக்கொண்டு ஆறாம் நூற்றாண்டில் குறிப்பாக மத்திய கிழக்கில் திருமணத்துக்கான தகமை "பருவமடைதல்" மட்டுமே என்பதை உறுதிப்படுத்த முடியும். இன்றைய காலத்துடன் ஒப்பீட்டளவில் சராசரி ஆயுட் காலமும் அக்காலங்களில் மிகக் குறைவே என்பதால் அப்பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைந்து திடகாத்திரமானவர்களாகவே இருந்திருப்பர் என்பதையும் ஊகிக்க முடிகிறது. இவைகளுடன் இன்னும் சில ஆதாரங்களையும் ஆய்வுக்குட்படுத்துவோம் ;

(III)ஆயிஸா(ரழி) அவர்களது அறிவிப்புகளும் கூட அக்கால முழுமையான பெண்களில் ஒருவராக தன்னை ஒப்பிட்டு அறிவித்துள்ளமையானது விமர்சனத்தை தகர்த்தெறிகிறது. உதாரணத்துக்காக;

"...........அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கு அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்......... "[புஹாரி :4141,4750]

".........இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்........." [புஹாரி :4757]

இவைகளிரண்டும் ஒரே சம்பவத்தை தரும் நீண்ட அறிவிப்புகளின் பகுதிகளாகும்.
முதல் காட்டப்பட்டுள்ள அறிவிப்பில் அக்கால பெண்களுடன் ஒருவராக தன்னை ஒப்பிடுகிறார்கள். இரண்டாவது காட்டப்பட்டுள்ளதில் சிறுவனுக்கும் தனக்குமான தெளிவான வித்தியாசத்தை உணர்த்தியுள்ளார்கள். இச்சம்பவம் ஹிஜாப் சட்டம் இஸ்லாத்தில் அறிமுகப்படுத்த முன் நடைபெற்றதாக இவ்வறிவிப்புகளின் ஏனைய பகுதிகள் கூறுகின்றன. ஆக ஒன்பது வயதிற்கும் பன்னிரண்டு வயதிற்குமிடைபட்ட காலத்தில் ஆயிஸா(ரழி) அவர்களது வளர்ச்சியை இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது.

இவ்வாதாரங்களுடன் சரித்திரங்கள் தரும் மனிதர்களால் எழுதப்பட்ட பண்டைய கால புராணங்களை ஆய்வு செய்யும் போது இது மேலும் வலுவாகிறது. அக்காலங்களில் எட்டு வயதில் திருமணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை மனு சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது.
பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹா கன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா நகன்யாஸீ.

என மனுசாஸ்திரம் எட்டு வயது திருமணத்தின் கட்டாயத்தையும், செய்யாது விடின் அதற்காக தகப்பனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மிக மோசமான தண்டனையையும் விளக்குகிறது. இக்கட்டுரையில் அத்தண்டனையின் முழு விபரத்தையும் உங்களது பார்வைக்குத்தர நான் தயங்குகிறேன். (கூகில் தேடு பொறியின் உதவியுடன் விபரம் அறிந்து கொள்ளுங்கள்)

(IV)இருந்தும் இங்கு நான் உங்களது கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய விடயம்; "இத்தண்டனை கொடுக்க இன்றைய உலகிலுள்ள எந்தவொரு எட்டு வயது சிறுமியாலும் முடியாதென்பதையே ஆகும். இந்நீதி எழுதப்படும் காலத்தில் இத்தண்டனையை கொடுக்க எட்டு வயது பெண்கள் அனைவராலும் முடிந்திருக்கின்றதெனின் அக்காலங்களில் பெண்கள் எட்டு வயதுக்கு முன்னரே மாதவிலக்கு ஆரம்பமாகி பூரண வளர்சியடைந்து இருந்துள்ளனர் என்பது மிகத்தெளிவாகிறது."

(V)இம்மமனு நீதி இன்னுமொரு ஆதாரத்தையும் எமக்கு தருகின்றது.
மனித வாழ்வுக்கு ஏனைய விடயங்களில் மிகசிறந்த நீதிகளை கூறும் இம் மனுசாஸ்திரம் இவ்விடயத்தில் மட்டும் இன்றைய காலத்துடன் முரண்பட வைக்கும் நீதியை தருவது ஏன்?
மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது.
கால மாற்றமே பெண்களின் வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்பதை இதிலிருந்து அடுத்த மிகத் தெளிவான ஆதாரமாகவே கொள்ளவேண்டும்.ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களது உடல் வளர்ச்சியின் வேகம் வித்தியாசப்படுகிறது என்பதையே இவ்வாய்வு உணர்த்துகிறது. இதனைக்கொண்டு

(VI)"இன்னும் சில நூற்றாண்டுகள் கழிந்த பின் விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதனின் ஆயுள் ஐநூறு வருடங்களாக அதிகரிக்கும்" [ஆதாரம் -Stem Cell Research.]

என்ற எடுகோளுடன் எதிர்காலத்தை ஆராய்வோம். அவ் வருங்கால சமூகம் இன்றைய பதினெட்டு வயது திருமணத்தை நிச்சயமாக எதிர்க்கவே செய்யும். மூர்க்கத்தனமானவர்களாக இன்றைய ஆண்களை அச்சமூகம் அடையாளப்படுத்தும். இது அடிப்படைவாத கருத்து என்பதை அழுத்தமாக வாதிட வேண்டியது எமது கடமையாகும். [இன்றே "பதினெட்டுவயது" என்பதை எதிர்க்கும் மனநிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளது மிக சிறந்த ஆதாரமாகும்.]
ஆக திருமணத்திற்கு உலக அழிவு வரை நீடித்து நிற்கக்கூடிய சட்டமொன்று வரையப்பட வேண்டுமானால் உடல் வளர்ச்சியையே கருத்திலெடுக்க வேண்டுமே தவிர வருடங்களையல்ல.

ஆம், இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை. அது அவனது ஆற்றலுக்குட்பட்ட விடயம். இஸ்லாம் முக்காலமும் உணர்ந்த மார்க்கமேயன்றி முட்டாள்தனமான மார்க்கமல்ல என பறைசாற்ற இதுவும் துணை நிற்கிறது.

அடுத்து,

முதிர்ச்சியற்ற அறிவு நிலை

இரண்டாவது முதிர்ச்சியற்ற அறிவு நிலை என்பதும் ஆயிஸா(ரழி) விடயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். காரணம் தனது ஒன்பதாவது வயது தொடக்கம் பதினெட்டாவது வயது(இன்றைய மைனர்) வரையுமே நபிகளாருடன் வாழ்க்கை நடத்திய இவர்கள் இக்குறுகிய காலத்தில் சேகரித்த விடயங்களே இஸ்லாமிய சட்டக்கலையின் பெரும்பகுதியாக இன்றைய நவீன உலகுடன் முட்டி மோதி வீழ்ந்து விடாது என்றுமே தலை நிமிர்ந்து பெண்ணியல் உரிமைகளாக நிற்கின்றன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

தொடர்ந்தும் வரலாறுகளை ஆய்வு செய்வோமாயின் முஹம்மத் ஸல் அவர்களின் வபாத்தைத் தொடர்ந்து ஆட்சி த் தலைமையேற்ற முதல் நான்கு கலீபாக்களினதும் ஆட்சியில், அதிலும் குறிப்பாக உலகின் மூன்றில் இரு பகுதி நிலபரப்பை தலைமை ஏற்று ஆட்சி நடத்தியவரும், மகாத்மா காந்தி வரையும் ("தான் உமருடைய ஆட்சியை இந்தியாவில் காண விரும்புகிறேன்" என) போற்றப்படுபவருமான உமர் (ரழி) அவர்களது ஆட்சியில், ஆயிஸா(ரழி)அவர்களின் சட்ட நுணுக்கங்கள் எந்தளவு பங்களிப்பு செய்தது என்பதையும் நாம் கவனிக்கும் போது தனது சிறு பராயத்திலமைந்த நபிகளாருடனான வாழ்க்கையின் போது அவர்கள் பெற்றிருந்த அறிவு நிலையின் உச்சத்தன்மையை அனுமானிக்கலாம்.

எனவே ஆயிஸா(ரழி) அவர்கள் முழு வளர்ச்சியடைந்த நிலையிலும் தெளிவான அறிவுள்ள நிலையிலுமே திருமணம் செய்துள்ளார்கள் என்பதும் அதனை கால இடைவெளியே எமது அறிவிற்கு தவறாக சித்தரிக்கின்றது என்பதையும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் இஸ்லாம் அறிவியல் பூர்வமான, கால மாற்றங்களை தனக்குள் வாங்கிக் கொள்ளும், உலக அழிவுவரையும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் மார்க்கம் என்ற உண்மையையே. இதனால் இஸ்லாம் வயதுகளைக்கொண்டு சட்டங்களை இயற்றுமளவு மனிதர்களின் கையாடல்கள் நிறைந்த முட்டாள்தனமான மார்க்கமல்ல என்பதை நாமறியலாம்.

அறிவியல் பார்வையில் எடுத்துக்கொண்ட விமர்சனத்துக்கான விளக்கங்கள் இதனுடன் நிறைவுற்றாலும்; திருமண விடயத்தில் அதிக வயது வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? என்பதை ஆய்வு செய்வோம்.

-03-இஸ்லாத்தின் திருமணம் சட்ட வரையறை.

நாமாக நமது தலைக்குள் புகுத்திக்கொண்ட அடிப்படைவாத கருத்துக்களையெல்லாம் கலைந்தெறிந்து விட்டு இறைவனது சட்டங்களை ஆய்வு செய்வோம். ஆம் இஸ்லாம் பெண்களின் திருமணத்திற்கு வரையறுத்துள்ள சட்டங்களை இனி நோக்குவோம்.

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது இரண்டு அங்கீகாரங்கள் மட்டுமே.
  • முதலாவது பெண்ணின் சம்மதம்.[அல்குர்ஆன்-4:19]
  • அடுத்தது அப்பெண்ணின் பொறுப்புதாரியின்(தகப்பன்) அங்கீகாரம்.
இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

இவ்வரம்புகளை இஸ்லாம் கட்டாயப்படுத்துவதன் மூலம்;

பெண்பிள்ளைகள் நாட்களை எண்ணிக்கொண்டே பதினெட்டு வயதை தொட்டதும் திருட்டுத்தனமாக செய்யும் பதிவுத் திருமணத்தையும், அதே நேரம் அப்பெண்பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பு திருமணத்தையும் இஸ்லாம் வலுவாக தடுத்துள்ளதை அறியலாம்.
திருமணத்தின் மூலம் ஆண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள குடும்ப பொறுப்புகள் அவர்களை தனித்து முடிவெடுக்கச்செய்ய போதுமானதாகும்.
ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக்கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.


இவைகளிலிருந்து
வரையறுக்கப்பட்ட இவ்வுலக வாழ்வில் மனிதர்களுக்காக இறைவன் ஏற்படுத்தித்தந்துள்ள லௌகீக நன்மைகளை மனிதர்களிடமிருந்து பறிக்கும் அடக்குமுறையாளர்களின் அடிப்படைவாத திணிப்பே திருமணத்திற்கு வயது வரம்புகளை இடுவதும், மறு திருமணத்தை எதிர்ப்பதும், சந்நியாசத்தையும், பிரம்மச்சாரியத்தையும் இறைவனின் பெயரால் ஊக்குவிப்பதும் என்பதையும் உங்களது அறிவு சரி கண்டிருக்கும் என நம்புகிறேன்.

இங்கு நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் உலக மக்களுக்கான சட்டங்களாக அடையாளப்படுத்துமாறு திருக்குர்ஆன் மூலம் இறைவன் உத்தரவிடுகிறான்.
இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

இவர்களது இருபத்தைந்தாவது வயதில் விதவையான நாற்பது வயதைக்கடந்த கதீஜா(ரழி) அவர்களை மணந்து தமது இளமைக்காலம் முழுதையும் அவர்களுடனான வாழ்வில் மட்டுமே செலவிட்டுள்ளார்கள். வாரிசுகளும் கூட நபி(ஸல்) அவர்களுக்கு முதல் மனைவியான கதீஜா(ரழி) அவர்கள் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது. இவர்களின் மரணத்தைத்தொடர்ந்தே தனது ஐம்பதாவது வயதிற்கு பின்னர் ஏனைய திருமணங்களை செய்துள்ளார்கள். அதிலும் ஆயிஸா(ரழி) அவர்களைத்தவிர மற்ற அனைவரும் விதவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருமணங்களே இஸ்லாமிய பெண்ணியல் சட்டங்கள் முழுதையும் உலகிற்கு வழங்கி இஸ்லாமிய சட்ட வரையறைகளை பூரணப்படுத்த முழுத்துணை நின்றுள்ளதைக்காணலாம்.
யாவற்றையும் அறிந்த சர்வவல்லமை மிக்கவனுக்கே புகழனைத்தும்.
-04-உங்களது அறிவுக்கு சவால் தரும் சிந்தனையை தூண்டும் கேள்வி.ஒரு பெண் எட்டாவது வயதிலோ அல்லது அதற்கு முன்னரோ பருவமடைந்து குழந்தைப்பேற்றுக்கு தான் தயார் என விஞ்ஞான ரீதியில் அறிவிக்கின்றாள். இதனைக்கண்டு மனம் பொறுக்காத உங்களால் இறைவன் சமூக விரோத செயலை செய்தமைக்காக அவனுடன் தர்கிக்க முடியுமா? அதற்கான சக்தி உங்களிடம் உள்ளதா?

உங்களது விடை இவற்றிலொன்றாகவே இருக்கும்.
  • நாத்திகர்களாயின் அது இயற்கை அது பற்றி தர்க்கிப்பது முட்டாள் தனம் என்ற நக்கல் தொனியிலும்,
  • பல கடவுள் கொள்கையாளர்களாயின் முடியும் என்றும் அதற்கு புராணங்களே சாட்சி என்றும்,
  • இன்னும் இறைவனது பண்புகளை அறிந்த, மற்றும் அறியாத ஆத்திகர்களாயின் அது இறைவனது செயல் ....?
என்றும் விடை தருவீர்கள்.

நீங்கள் கூறிய இந்த இயற்கையையும், உங்களது கற்பனையில் நிலைகொண்டிருக்கும் கடவுள் குறித்த உருவங்களையும் இன்னும் நீங்கள் நம்பும் புராணங்களையும், வேதங்களையும் சடப்பொருட்களையும், சடமல்லாப்பொருட்களையும், இம்முழுப்பிரபஞ்சத்தில் காணும், மற்றும் காணாத அனைத்தையும் பரிபாலித்துக்கொண்டிருக்கும் ஒருவனைப்பற்றி ஆய்வு செய்ய திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவரையும் அழைக்கிறது. தான் உலக மக்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட அத்தாட்சி எனவும் ஓர் அதிசயம் எனவும் தன்னை ஆய்வு செய்வதற்கான வழிகளை திருக்குர்ஆன் விருப்புடன் திறந்து தந்துள்ளது. அதுவே உலக மக்களுக்கான கடமை என்று எச்ச்சரித்தும் நிற்கிறது.

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (திருக்குர்ஆன்-47:24)

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (திருக்குர்ஆன்-38:29)

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.(திருக்குர்ஆன்16:44)

அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக் குர்ஆன்-4:82)

என்று உலக மக்களிடம் வேண்டும் இத்திருக்குர்ஆன்;
  • இலக்கண இலக்கியங்களுக்கு அப்பால் தொடர்ந்து பேசுகிறது,
  • வரலாறுகளையும் பேசுகிறது,
  • பொருளாதாரத்தையும் பேசுகிறது,
  • விஞ்ஞானத்தையும் பேசுகிறது,
  • படைப்புகளின் இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது,
  • எதிர்காலத்தையும் முன்னறிவிப்பு செய்கிறது,
  • உலக மானுட வாழ்வுகளுக்கான முழுச்சட்டங்களையும் வரையறுத்து பேசுகிறது.

இவ்வாறு பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கியதுடன் நில்லாது நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து சொல்கிறது முடிந்தால் தன்னிடமுள்ள முரண்பாடுகளை வெளிக்கொண்டு வருமாறும் தான் சுமந்திருக்கும் ஆயிரக்கணக்கான வசனங்களைப்போன்று ஒருவசனத்தை உருவாக்கிக் காட்டுமாறும் கூறி நிற்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இது இறைவனைத்தவிர மனிதனாலோ வேறெந்த இலத்திரனியல் உபகரணங்களாலோ செய்ய முடியாத காரியமாகும்.

ஆக எமது சிற்றறிவைக்கொண்டு இறைவனது பண்புகளையும் அவனால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும் ஆராய்வதற்கு நேரத்தை வீணாக்காது இறைவனது இருப்பையும் அவனது கட்டளைகளையும் ஆராய முற்படுவதே மனிதர்களின் முன்னுள்ள கடமையாகும் என்பதை அச்சத்துடன் உணர்ந்து கொள்ள முற்படுங்கள்.

(நபியே!)நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன்-2:99)

நண்பர்களே! கிளை விடயங்களால் ஒருபோதும் இஸ்லாத்தின் எழுச்சியையும் இறைவனின் சத்தியத்தையும் மறைத்துவிட முடியாது. முதன்மையான விடயமான இறைவனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதனைத்தொடர்ந்து அவனது சட்டங்களை கடைபிடிப்பதன் தார்மீக கடமைகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கால விரயத்தால் மரணத்திற்கு பின்னரான முடிவில்லா வாழ்க்கையில் நட்டமடைந்து விடாதீர்கள்.











No comments:

Post a Comment