Tuesday, February 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (இவ்வாறிருக்கும் போது) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விடயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக் குர்ஆன்-3:66)
01.தலை வாயில் .
02.இவர்களது பார்வையில்.
03.அதிசய மனிதர்?
முஹம்மது நபி அவர்களின் அதிசயத் தன்மைகளில் சிலவற்றை மட்டுமே கட்டுரையின் ஆசிரியர் முஹம்மத் நிஸார்தீன் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்ய மறந்த (மறுத்த) வைகளில் ஒரு நிகழ்வைக் காண்போம்.
ReplyDeleteஇன்றைய அறிவியல் உலகம் வியக்கும் பல அறிவியல் தத்துவங்களை வெளியிட்டவர் முஹம்மது நபி அவர்கள். இருபதாம் நுற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன், நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் ஏழாம் வானத்திலிருந்து உற்பத்தியாவதை தன்னுடைய விண்வெளிப் பயணத்தின் பொழுது கண்டறிந்து உலகிற்கு அதை வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளிலும், வாழ்வியலிலும் மற்றும் சட்டவரைமுறைகளிலும் இதைப் போன்ற அவரது புதுமைகள் நிறைய உள்ளன.
என்றும் அன்புடன்
தஜ்ஜால்.
"இவ்வுலகிலுள்ள நைல் நதி அல்லது யூப்ரடிஸ் நதி ஏழாவது வானத்திலிருந்து ஊற்றெடுக்கின்றது"
ReplyDeleteஎன்ற அறிவிப்புகள் எங்கும் இல்லை. மாறாக மிஹ்ராஜ் பயணத்தின் போது (ஊற்றெடுக்கும் இடத்தை அல்ல)நதிகளை கண்டுள்ளார்கள் என்பதை தெளிவாக உங்களது கேள்வி உணர்த்த வில்லை.
முஹம்மத் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்தை கடந்த பின் தொடர்ந்து தூதர் (ஸல்) அவர்களுக்கு சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒன்றை பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
///நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.///
(புஹாரி 3207,3887)
அவர்கள் நின்ற இடமும் அதன் தன்மைகளும் அல்லாஹ்வே அறிந்த ஒன்று. இங்கு சொர்க்கத்தில் இருப்பவைகளை உள்ளே என்று பிரித்துக் கூறப்பட்டுள்ளது . ஆக வெளியே இருப்பவைகள் நைல் மற்றும் யூப்ரட்டிஸ் என (ஸல்) அவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
இதில் முரண்பாடுகள் எதுவும் இல்லையே. உலகிலுள்ள நதிகளை நேரடியாக (ஸல்) அவர்கள் காணும் சக்தியை பெற்றிருக்கலாம். அல்லது வேறொரு விதமாகவும் இதனை விளங்க முடியும். இப்பயணம் குறித்த மற்றொரு அறிவிப்பில்;
////அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார்./////
(புஹாரி-3679)
இவ்வாறு கூறுகிறார்கள்.
பிலால் (ரலி) தம்முடன் அமர்ந்திருந்த நிலையில் அவர்களது காலடியோசையை சொர்க்கத்தில் கேட்டதாக தூதர் (ஸல்) அறிவித்துள்ளார்கள். எவ்வாறு இது சாத்தியம்?
இப்பயணம் NASA மனிதர்களை அமர வைத்து அனுப்பும் சாதாரண விண்கலப் பயணமல்ல. சர்வ வல்லமை மிக்க அல்லாஹ் தனது தூதரை எதிர்காலத்துக்கு அழைத்துச்சென்ற மனிதனால் புரிந்து கொள்ள முடியாத பயணமாகும். அவ்விடத்தில் பிலால்(ரலி) அவர்களின் சொர்க்க நடமாட்டத்தை கேட்க வைக்க முடிந்த அல்லாஹ்வால் நைல் நதியையும் பார்க்க வைத்திருக்க சாத்தியமுண்டே. ஆக பயணத்தின் தன்மையை விரிவாக ஆய்வு செய்யுங்கள்.
எமது கண்ணுக்கும் அறிவுக்கும் அத்தாட்சிகளாக்கியுள்ள விடயங்களை பல கேள்விகளாக குறித்த தலைப்பில் முன்வைத்துள்ளேன்; உங்களைப்போன்றவர்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து மரணத்திற்கு பின் வெற்றியடைவீர்கள் என்ற நம்பிக்கையில்.
இவ்வாறான தெளிவான விடயங்களுக்கு விடை காண முடியாவிடின் மறைவானவைகளை நம்பிக்கை கொள்வது ஒன்றே வழி. ஆம்
வணங்கத்தகுந்த ஏக இறைவனது திருத்தூதரே முஹம்மத் (ஸல்) அவர்கள் என்று உறுதி மொழிகிறேன்.