Tuesday, February 17, 2009

கலந்துரையாடலின் தொடர்ச்சி

தஜ்ஜால் எனும் புனைப்பெயருடன் கோயம்புத்தூரிலிருந்து ஒரு அன்பர் தன் வாதங்களை குதர்க்கமாக முன் வைத்து வந்துள்ளதை மேலுள்ள இணைப்பு அறியத்தருகிறது. அவருக்கு மிகத்தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பப்பட்டு வந்திருந்த நிலையிலும் கொடுக்கும் அவ்விளக்கங்களை முழுமையாக ஆராயாது மீண்டும் மீண்டும் கொடுத்த விளக்கத்திலுள்ளதையே திரும்பவும் கேட்கிறார். ("எல்லாம் அவன் செயல்" என்ற தலைப்பிலமைந்த அவரது கேள்விகளுக்கான விளக்கங்கள் விரிவாக தனிப்பக்கத்தில்இங்கு மீண்டும் பதியப்பட்டுள்ளது. ) அவ்வாறே இவ்விளக்கமும் "தலைவாயில்" பகுதியின் "இறைவனைத்தேடி ஓர் அறிவியல் பயணம்" கட்டுரை குறித்த விளக்கமாகும். எனது எழுத்துகளை தெளிவாக கிரகித்திருந்தால் இவ்விளக்கங்களும் அவருக்கு தேவைப்பட்டிருக்காது. அக்கட்டுரையின் முதன்மையான உரையாடல்.பகுதியில் அக்கட்டுரை சம்பந்தமான ஏனைய கேள்விகளை முன்வைக்கலாம்.

கேள்விகளின் இலக்கங்கள் கொடுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

01.கேள்விகளே இனி இல்லையென்ற நிலை வரும் வரையும் மதங்கள் தொடர்பில் ஆய்வை தொடருங்கள் என கூறிய பின் ஏன் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க வில்லை?

05. இறைவனை அணு அணுவாக ஆராய முற்படும் வேளையில் கிடைத்த சில கருத்துக்களே தங்களுடைய தளத்தில் வைக்கப்பட்ட “எல்லாம் அவன் செயல்?” இக் கட்டுரை தங்களின் தலைப்பிற்கு சிறிதும் பொருந்தவில்லை, நீக்கப்படும் என உளறியிருக்கிறீர்கள்.

விளக்கம்
அவர் முன்னர் முன் வைத்த கேள்விகளுக்கான விளக்கங்கள் பற்றி வினவுகிறார். அவரது கேள்வியை தொடர்ந்து தளத்தின் நோக்கத்தை முதலில் நான் தெளிவுறுத்திய பின்(March 17, 2009) அவரது கேள்விகளுக்கான விடைகள்(March 19, 2009) மூன்று பந்திகளில் கொடுக்கப்பட்டுள்ளதை அவரது மேலோட்ட வாசிப்பு கவனத்திலெடுக்கவில்லை. அவர் தெளிவு பெறுவதற்காக அல்லாமல் எனது முயற்சியை திசை திருப்பவே கேள்விகளை முன்வைக்கிறார் என்பதை இதன் மூலம் தெளிவாக உணரலாம்.

இருந்தும் அவர் அறியாதிருக்கின்றார்; எனது எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இறைத்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை அறிவியல் ரீதியாக அடையாளப்படுத்தும் என்ற உண்மையை.

சுயமாக ஆய்வை மேற்கொள்ள கூறியுள்ளதை கவனிக்காது விடைகளை அவரது முதுக்குப்பின்னால் ஒழித்து வைத்துக்கொண்டே என்னிடம் சில்லறைக்கேள்விகளை முன்வைத்து எனது நேரத்தை சேதப்படுத்த முனைகிறார்.

"இவ்வாய்வை தொடர்வதால் உள்ள பலனும் உங்களுக்கே தொடராதிருப்பதால் உள்ள முடிவில்லாத வாழ்வின் கேடும் உங்களுக்கே" என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளேன். இஸ்லாம் என் மீது சுமத்தியிருக்கும் கடமைக்கான எல்லையே அது. உங்களது ஆய்வுகளுக்கான முழு வசதிகளை இன்றைய இணையம் செய்து தந்துள்ளது. ஓரிடத்திலிருந்தே அதற்குள் நீங்கள் அனைத்தையும் தேடலாம். எனது தளம் முதன்மையான விடயங்கள் அனைத்தையும் தொட்டுச்செல்லும். அவ்வாறான தொடுதலே இறையிருப்பை நூறு வீதம் உறுதி செய்யும். மேலதிக சில்லறைக் கேள்விகள் இருப்பின் அவைகளுக்கான விளக்கங்கள் பெற இணைப்புகளையும் தரும்.

02. கலிலியோ கலிலிக்கு "உலகம் உருண்டை" என்ற வாதத்தை முன் வைத்ததற்காக மரணதண்னை வழங்கியது சிந்திக்க மறுத்த ஆன்மீகவாதிகள் என்பதை மறைத்தது ஏன்?
விளக்கம்
அடிப்படைவாதிகள் என்பது ஆன்மீகவாதிகளா, அல்லது ஏனையவர்களா என்ற தோரணையில் அங்கு ஆராயப்படவில்லை.
சிந்திக்க மறுப்பவர்களா?
சிந்தனையை தூண்டுபவர்களா?
என்பதேயே அடையாளடையாளங்காண வேண்டும். இக்கட்டுரை ஆன்மீகவாதிகள் என அடையாளப் படுத்தப்பட்டிருப்பவர்ளுக்கும், இஸ்லாமிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கும் பலமான வேறுபாடுகளை காட்டவே முயன்றிருக்கின்றது. முன்னையவர்கள் "அடிப்படைவாதிகள்" பின்னையவர்கள் "பகுத்தறிவாதிகள்". பின்னையவர்களை பகுத்தறிவாதிகள் என கூறக்காரணம் இவர்கள் அல்குர்ஆனை ஒப்பிடாத துறைகளே இல்லை.

03.//தொடர்ந்த ஆய்வே ஐன்ஸ்டைனை அங்கீகரித்தது.//
04. // விஞ்ஞானத்துக்கு அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால் மேலும் சக்தி வாய்ந்த கருவிகளை கொண்டு தேடுவதே புத்திசாலித்தனம்.//
விளக்கம்
மனித ஆய்வினால் முடியுமானவைகளையே தேட முடியும். அவ்வாய்வுகளுக்காகவே இறைவன் திருக்குர்ஆனில் அத்தாட்சிகளை புதைத்து வைத்துள்ளான். ஐன்ஸ்டைனைப்போல் ஆயிரம் பேரை கூட்டி வந்தாயினும் தேடுங்கள். அதிலுள்ள விஞ்ஞானத்தையும், முன்னறிவிப்புகளையும், வரலாறுகளையும் இன்னுமுள்ள பல துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டு ஏதாயினும் ஒரு துறையிலுள்ள ஒரு விடயத்தையேனும் பொய்ப்பியுங்கள். பொய்ப்பிக்க முடியாதுவிடில் "இறைத்தூதரேயன்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் வேறில்லை" என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். மாறாக இறைவனை (புலனுறுப்புகளுக்குள் இருந்து) உங்களது அறிவியல் கண்களால் காணமுடியாது; புலனுருப்புகளுக்கு வெளியே உள்ள) அறிவியல் சிந்தனைகளால் மட்டுமே முடியும். "அகப்படாது என நிச்சயமாக தெரிந்த பின்னும் (இறைவனை) தொலைக்காட்டியை கொண்டு தேடுவேன்" என்பது உங்களைப் போன்ற அறிவாளிகள்? மட்டுமே கூறும் வாசகம். கட்டுரையின் உள்ளடக்கம் இதை பின்வருமாறு தெளிவு படுத்துகிறது.

///////விஞ்ஞானத்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வை கொண்டு இறைவனை அறியவும் மரணத்தின் பின்னுள்ள மனிதனின் நிலையை அறியவும் முயற்சிக்க வேண்டுமானால் விஞ்ஞானம் தனது நூறு சதவீத ஆய்வையும் நிறைவு செய்து விட்டதாய் உறுதி தர வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறான உறுதி கிடைத்தால் மட்டுமே இது சாத்தியப்படலாம். கோடியாண்டுகள் ஆனாலும் படைப்புகள் பற்றிய தேடலே முடியப்போவதில்லை என்ற நிலையில் படைத்தவன் பற்றிய தேடலை விஞ்ஞானம் மூலம் மேற்கொள்வது சாத்தியமில்லை.////////

06. விளக்கம்இங்கு மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றிய அச்சமே இறைவனை பற்றிய ஆய்விற்கு உட்படுத்துகிறது. என்பதை ஏற்றுக்கொள்கிறார். அல்ஹம்துலில்லாஹ். அந்த அச்சத்துடன் தொடர்ந்து விடாது முயன்றால் நிச்சயம் உங்களுக்கு நேர்வழி கிடைக்கும்.

07. யாருடைய எந்த புலனுறுப்புகளுக்கும் எவ்வகையிலும் எந்தக்காலத்திலும் தென்படவே மாட்டேன் என யாரிடமாவது சத்தியமிட்டு கூறியிருக்கிறானா? என்னைக் காணும் சக்தி மனிதனுக்கு இல்லை என்று மட்டுமே தகவல் உள்ளது. தன்னைக் காணும் சக்தி மனிதனுக்கு அளிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளானா?
விளக்கம்
இக்கேள்விகளைத் திரும்பத்திரும்ப ஆயிரமாயிரம் முறை வாசியுங்கள். மிகத் தெட்டத் தெளிவான உளறல் என்பதைத் தவிர உருப்படியான வாதம் எதுவும் இவரிடம் இருப்பதாக தெரியவில்லை. சர்வ வல்லமை மிக்க படைத்தவன் கூறுகிறான் படைப்புகளுக்கு அந்த சக்தி இல்லையென்று இனியென்ன முட்டாள்தனமான கேள்விகள். இதற்கு தெளிவான ஆதாரம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் அதை விடுத்து ஏதேதோ பேசுகிறார். இவர் ஏற்கனவே இறைவன் இருப்பதை ஏற்றுக்கொண்டவர். இத்தொடுப்பிலுள்ள
அவரது கருத்தில் ஐந்தாவது பந்தியில் கூறுகிறார்.

"ஒருவேளை எட்டாவது வயதிலோ, அதற்கு முன்னரோ அல்லது பிறந்தவுடனோ பருவமடைந்தால் அது இறைவனின் நாட்டமே இதில் தர்கத்திற்கு ஒன்றும் இல்லை என்பது என்னுடைய பதில்."

இவ்வாறு கூறிய அவர் இறைவனை நிரூபிக்க முடியாது ஏதோ நாஸ்திகரானது போல் தடுமாறுகிறார். நாஸ்திகர் என்ற நிலையில் நீங்கள் தெளிவாக இருப்பீர்களானால் உங்களது அடுத்த கேள்வியின் மேற்கோளிலுள்ள சவாலை ஏற்கத்துணியுங்கள்.

08.
I.
"ஆஸ்திகத்தை நிரூபிக்க இறை வழிகாட்டல் உண்டு (ஒரே இறைவன் உள்ளான் என்பதை முஹம்மத்(ஸல் அவர்கள் சமர்ப்பித்த கோட்பாடுகளை கொண்டு 100% ஒவ்வொருவரது பகுத்தறிவும் சரி என காணும் வரையும், இனி மாற்று கேள்விகளே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வரும் வரையும் இறைவனது துணை கொண்டு நிரூபிப்பேன் என உறுதி தருகிறேன்."
என்ற கருத்தை மேற்கோள் காட்டி உணரத்தவறியது ஏன் என என்னை கேட்கிறார்.
விளக்கம்
இன்னும் சில கேள்விகளை கீழுள்ள தளம் மூலம் அவருக்கு முன்வைத்து. அவர் கேட்ட கேள்வியை அவருக்கே திருப்புகிறேன்.
http://a1-islam.blogspot.com
உங்களை வணங்கத்தகுந்த நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அவனது திருத்தூதரே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை ஏற்க மறுக்கத்தூண்டுவது சைத்தானியத்தை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

II.
இன்னும் வரும்...
மீண்டும் சிந்திப்போம்.
விளக்கம்
மேலுள்ள கலிமாவை மொழிந்து நீங்கள் மீண்டும் சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் சந்திப்பதில் ஆர்வத்துடனும் உள்ளேன்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment