Tuesday, February 17, 2009

திருமணத்திற்கான வயதெல்லை?

question from Wikipedia

நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் குடும்ப உறவு கொண்டார்கள்.

அறிவிப்பவர்-ஆயிஸா(ரழி)[புஹாரி-3894,5133, 5134, 5156, 5158, 5160.]

ஆயிஸா(ரழி) அவர்கள் தனது திருமண செய்தியை வெளிப்படுத்தியுள்ள இவ்வறிவிப்புகள் மிக அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாகும். இவ்வறிவிப்புகள் அனைத்திலும் தனது திருமணத்தை ஓர் செய்தியாக ஆயிஸா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்களே தவிர அபூர்வமாக நிகழ்ந்த சம்பவமாக குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திலெடுத்து எனது விளக்கம் முழுதையும் கவனமாக அறிவிற்கு உட்படுத்துங்கள். உண்மையும், சத்தியமும் பேசப்படும் தளங்கள் அனைத்திலும் கருத்துப்பறிமாற்றப்பகுதி திறந்தே இருக்கும் என்பதை அறியத்தருவதுடன் அவ்விதிகளுக்குட்பட்டே இத்தளமும் இருக்கும் என்ற உறுதியையும் தருகிறேன்.

கட்டுரையினுள் அடங்கியவைகள்.

-01-இத்திருமணம் மூலம் ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகள்.
-02-லௌகீக தன்மையிலிருந்து சமூக நலப் பார்வை.
-03-இஸ்லாத்தின் திருமணம் சட்ட வரையறை.
-04-உங்களது அறிவுக்கு சவால் தரும் சிந்தனையை தூண்டும் கேள்வி.



உள்ளடக்கத் துளிகள்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்கள் சிறு வயதிலேயே
முழுமையான பெண்களாக வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்பதை
இக்கட்டுரை மிகத்தெளிவாக உறுதி செய்கிறது."

"இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும்
திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை
இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை
எம்மிடமில்லை. அது அவனது ஆற்றலுக்குட்பட்ட விடயம். இஸ்லாம் முக்காலமும்
உணர்ந்த மார்க்கமேயன்றி முட்டாள்தனமான மார்க்கமல்ல என பறைசாற்ற
இதுவும் துணை நிற்கிறது."

"இவைகளிலிருந்து வரையறுக்கப்பட்ட இவ்வுலக வாழ்வில் மனிதர்களுக்காக
இறைவன் ஏற்படுத்தித்தந்துள்ள லௌகீக நன்மைகளை மனிதர்களிடமிருந்து
பறிக்கும் அடக்குமுறையாளர்களின் அடிப்படைவாத திணிப்பே திருமணத்திற்கு
வயது வரம்புகளை இடுவதும் மறு திருமணத்தை எதிர்ப்பதும், சந்நியாசத்தையும்,
பிரம்மச்சாரியத்தையும் இறைவனின் பெயரால் ஊக்குவிப்பதும் என்பதையும்
உங்களது அறிவு சரி கண்டிருக்கும் என நம்புகிறேன்."



இத்திருமணம் இறைவனது ஏற்பாடென்பதற்கான மிகத்தெளிவான ஆதாரங்கள்[புகாரி-5078,7012] உள்ளதால் இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

இருந்தும் ஏக இறைவன் ஒருவனே என்பதையும் அவனது இறுதித்தூதரே முஹம்மத்(ஸல்)அவர்கள் என்ற உண்மையையும் உறுதிப்படுத்த இவ்வாய்வுகளும் எமக்கு துணை நிற்கும் என்பதால் அல்லாஹ் கொடுத்த அறிவைக்கொண்டு நாம் ஆய்வு செய்வோம்.

-01-இத்திருமணம் மூலம் ஏக இறைவனான அல்லாஹ் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகள்.

முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா(ரழி)அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம்.

  • ஆயிஸா(ரழி) அவர்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு பின்னிருந்த மனைவியர்களில் மிக நீண்ட காலம் வாழ்ந்துள்ளார்கள். இக்காலங்களில் ஆண்களுக்கான சட்ட விளக்கங்களை வழங்க பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்கள் வாழ்ந்துள்ள நிலையில் பெண்கள் எதிர்கொண்ட புதுப்புது சந்தேகங்களுக்கான சட்ட விளக்கங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழியில் ஆயிஸா(ரழி) அவர்கள் மட்டுமே துணை நின்றுள்ளார்கள்.

  • முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை சம்பவங்களான ஹதீஸ்களை அதிகம் அறிவித்தவர்களில் இவர்கள் ஒருவராகவும் மேலும் பெண்ணியல் மற்றும் குடும்பவியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவர்களே முதன்மையானவராகவும் உள்ளார்.

  • நபி(ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா(ரழி)அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தினது பலன்களை இஸ்லாம் இன்றளவும் அனுபவிக்கின்றது. (இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.)
இஸ்லாமிய சட்டவாக்க தொகுப்பிலும் இஸ்லாத்தை பூரணத்துவமடடையச் செய்வதிலும் இத்திருமணத்தினதும் ஆயிஸா(ரழி) அவர்களின் பங்களிப்பினதும் அவசியம் எந்தளவு இருந்துள்ளது என்பதை அறிய மேலுள்ள சான்றுகளே போதும் என கருதுகிறேன்.

அடுத்து மிக கூர்மையாக நோக்க வேண்டிய முக்கிய விடயமொன்றை பார்ப்போம்;
இஸ்லாம் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களுக்கு தங்களது கருத்துகளை முன்வைக்கும் உரிமையை கொடுத்ததுடன் நில்லாது அதையே அவர்களது கடமையாக எதிர்பார்த்தும் நின்றது. இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தமது திருமணங்களின் திருப்தியற்ற தன்மையினை இவர்களில் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தாலும் கூட; உலகின் பெரும் சாம்ராஜ்யமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துணை கொண்டு (பொருளாதார பலத்தால் அல்ல) மன உறுதிமிக்க நம்பிக்கையாளர்களால் கட்டியெழுப்பியிருந்த இஸ்லாம் அந்நம்பிக்கையாளர்களின் மன உறுதியைத் தகர்க்கச்செய்து சிதறுண்டிருக்க வழிகோளியிருக்கும். இதுவும் கூட அல்லாஹ் பகிரங்கப்படுத்தியுள்ள இறையத்தாட்சிகளில் ஒன்றே எனலாம்.

-02-லௌகீக தன்மையிலிருந்து சமூக நலப் பார்வை.

இனி இன்றைய சமூகப் பார்வையை இத்திருமண விடயத்தில் செலுத்துவோம். இறைவன் ஒரு பெண்ணை குழந்தை பேற்றுக்கு தயார்படுத்திவிட்டான் என்பதை விஞ்ஞான ரீதியாக அறிவிப்பதே பெண் "பருவமடைதல்" என்பதாகும். ஆண் உட்பட உயிரினங்கள் அனைத்திற்குமான அடிப்படையலகு இதுவே. இதனை சந்தேகமில்லாது தெளிந்த அறிவுடன் ஏற்று இவ்வுலகில் நாமாக உருவாக்கிக்கொண்ட வேறெந்த கொள்கைகளுக்கும் சம்பிரதாய சடங்குகளுக்கும் எமது தலையில் இடம் கொடுக்காது சிந்திப்போமாயின், பருவமடைந்த பெண்ணுக்கு சிறு பராயத்தில் திருமணம் செய்யப்படுவது தவறானதாக கருதப்பட இரண்டு காரணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

  • உடல் வளர்ச்சி போதாமை.
  • முதிர்ச்சியற்ற அறிவு நிலை.
இவ்விரண்டு நிலைகளையுமே நாம் ஆயிஸா (ரழி) அவர்களது விடயத்தில் பொருத்தி பார்க்க வேண்டும்; ஆம் வரலாறுகளை ஆராய வேண்டும்.

உடல் வளர்ச்சி ஆய்வு.

(I)நபி (ஸல்) அவர்களது தோழர்கள் நபியவர்களிடம் "நீர் உண்மையில் இறைவனது தூதர்தானா? அல்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது தானா?" [ஆதாரம்-புஹாரி:63,92] என்ற கேள்விகளைக்கூட திரும்பத் திரும்ப கேட்கத் தயங்காதவர்கள் இத்திருமணம் குறித்து எங்கும் வினவியதாக அறியக் கிடைக்கவில்லை.

(II)அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்லாயிரக்கணக்கான செய்திகளை உலகிற்கு அறிவித்தவரும் தனது திருமண வயதையும் அறிவித்தவருமான ஆயிஸா(ரழி)அவர்கள் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் வினவவோ அறிவிக்கவோ முயற்சிக்கவில்லை.

இவைகளைக்கொண்டு ஆறாம் நூற்றாண்டில் குறிப்பாக மத்திய கிழக்கில் திருமணத்துக்கான தகமை "பருவமடைதல்" மட்டுமே என்பதை உறுதிப்படுத்த முடியும். இன்றைய காலத்துடன் ஒப்பீட்டளவில் சராசரி ஆயுட் காலமும் அக்காலங்களில் மிகக் குறைவே என்பதால் அப்பெண்கள் சிறுவயதிலேயே பருவமடைந்து திடகாத்திரமானவர்களாகவே இருந்திருப்பர் என்பதையும் ஊகிக்க முடிகிறது. இவைகளுடன் இன்னும் சில ஆதாரங்களையும் ஆய்வுக்குட்படுத்துவோம் ;

(III)ஆயிஸா(ரழி) அவர்களது அறிவிப்புகளும் கூட அக்கால முழுமையான பெண்களில் ஒருவராக தன்னை ஒப்பிட்டு அறிவித்துள்ளமையானது விமர்சனத்தை தகர்த்தெறிகிறது. உதாரணத்துக்காக;

"...........அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கு அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்......... "[புஹாரி :4141,4750]

".........இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்........." [புஹாரி :4757]

இவைகளிரண்டும் ஒரே சம்பவத்தை தரும் நீண்ட அறிவிப்புகளின் பகுதிகளாகும்.
முதல் காட்டப்பட்டுள்ள அறிவிப்பில் அக்கால பெண்களுடன் ஒருவராக தன்னை ஒப்பிடுகிறார்கள். இரண்டாவது காட்டப்பட்டுள்ளதில் சிறுவனுக்கும் தனக்குமான தெளிவான வித்தியாசத்தை உணர்த்தியுள்ளார்கள். இச்சம்பவம் ஹிஜாப் சட்டம் இஸ்லாத்தில் அறிமுகப்படுத்த முன் நடைபெற்றதாக இவ்வறிவிப்புகளின் ஏனைய பகுதிகள் கூறுகின்றன. ஆக ஒன்பது வயதிற்கும் பன்னிரண்டு வயதிற்குமிடைபட்ட காலத்தில் ஆயிஸா(ரழி) அவர்களது வளர்ச்சியை இவ்வாய்வு உறுதிப்படுத்துகிறது.

இவ்வாதாரங்களுடன் சரித்திரங்கள் தரும் மனிதர்களால் எழுதப்பட்ட பண்டைய கால புராணங்களை ஆய்வு செய்யும் போது இது மேலும் வலுவாகிறது. அக்காலங்களில் எட்டு வயதில் திருமணம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை மனு சாஸ்திரம் இவ்வாறு கூறுகிறது.

பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹா கன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா நகன்யாஸீ.

என மனுசாஸ்திரம் எட்டு வயது திருமணத்தின் கட்டாயத்தையும், செய்யாது விடின் அதற்காக தகப்பனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மிக மோசமான தண்டனையையும் விளக்குகிறது. இக்கட்டுரையில் அத்தண்டனையின் முழு விபரத்தையும் உங்களது பார்வைக்குத்தர நான் தயங்குகிறேன்.

(IV)இருந்தும் இங்கு நான் உங்களது கவனத்துக்கு கொண்டு வர வேண்டிய விடயம்;
"இத்தண்டனை கொடுக்க இன்றைய உலகிலுள்ள எந்தவொரு எட்டு வயது சிறுமியாலும் முடியாதென்பதையே ஆகும். இந்நீதி எழுதப்படும் காலத்தில் இத்தண்டனையை கொடுக்க அனைத்து பெண்களாலும் முடிந்த ஒன்றாக இருந்திருக்கிறதெனின் அக்காலங்களில் பெண்கள் சிறுவயதில் பூரண வளர்சியடைந்து இருந்துள்ளனர் என்பது மிகத்தெளிவாகிறது."

(V)இம்மமனு நீதி இன்னுமொரு ஆதாரத்தையும் எமக்கு தருகின்றது.
மனித வாழ்வுக்கு ஏனைய விடயங்களில் மிகசிறந்த நீதிகளை கூறும் இம் மனுசாஸ்திரம் இவ்விடயத்தில் மட்டும் இன்றைய காலத்துடன் முரண்பட வைக்கும் நீதியை தருவது ஏன்?
மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது.
கால மாற்றமே பெண்களின் வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்பதை இதிலிருந்து அடுத்த மிகத் தெளிவான ஆதாரமாகவே கொள்ளவேண்டும்.ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம்.

ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களது உடல் வளர்ச்சியின் வேகம் வித்தியாசப்படுகிறது என்பதையே இவ்வாய்வு உணர்த்துகிறது. இதனைக்கொண்டு

(VI)"இன்னும் சில நூற்றாண்டுகள் கழிந்த பின் விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதனின் ஆயுள் ஐநூறு வருடங்களாக அதிகரிக்கும்" [ஆதாரம் -Stem Cell Research.]

என்ற எடுகோளுடன் எதிர்காலத்தை ஆராய்வோம். அவ் வருங்கால சமூகம் இன்றைய பதினெட்டு வயது திருமணத்தை நிச்சயமாக எதிர்க்கவே செய்யும். மூர்க்கத்தனமானவர்களாக இன்றைய ஆண்களை அச்சமூகம் அடையாளப்படுத்தும். இது அடிப்படைவாத கருத்து என்பதை அழுத்தமாக வாதிட வேண்டியது எமது கடமையாகும். [இன்றே "பதினெட்டுவயது" என்பதை எதிர்க்கும் மனநிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளது மிக சிறந்த ஆதாரமாகும்.]
ஆக திருமணத்திற்கு உலக அழிவு வரை நீடித்து நிற்கக்கூடிய சட்டமொன்று வரையப்பட வேண்டுமானால் உடல் வளர்ச்சியையே கருத்திலெடுக்க வேண்டுமே தவிர வருடங்களையல்ல.

ஆம், இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை. அது அவனது ஆற்றலுக்குட்பட்ட விடயம். இஸ்லாம் முக்காலமும் உணர்ந்த மார்க்கமேயன்றி முட்டாள்தனமான மார்க்கமல்ல என பறைசாற்ற இதுவும் துணை நிற்கிறது.

அடுத்து,
முதிர்ச்சியற்ற அறிவு நிலை

இரண்டாவது முதிர்ச்சியற்ற அறிவு நிலை என்பதும் ஆயிஸா(ரழி) விடயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். காரணம் தனது ஒன்பதாவது வயது தொடக்கம் பதினெட்டாவது வயது(இன்றைய மைனர்) வரையுமே நபிகளாருடன் வாழ்க்கை நடத்திய இவர்கள் இக்குறுகிய காலத்தில் சேகரித்த விடயங்களே இஸ்லாமிய சட்டக்கலையின் பெரும்பகுதியாக இன்றைய நவீன உலகுடன் முட்டி மோதி வீழ்ந்து விடாது என்றுமே தலை நிமிர்ந்து பெண்ணியல் உரிமைகளாக நிற்கின்றன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

தொடர்ந்தும் வரலாறுகளை ஆய்வு செய்வோமாயின் முஹம்மத் ஸல் அவர்களின் வபாத்தைத் தொடர்ந்து ஆட்சி த் தலைமையேற்ற முதல் நான்கு கலீபாக்களினதும் ஆட்சியில், அதிலும் குறிப்பாக உலகின் மூன்றில் இரு பகுதி நிலபரப்பை தலைமை ஏற்று ஆட்சி நடத்தியவரும், மகாத்மா காந்தி வரையும் ("தான் உமருடைய ஆட்சியை இந்தியாவில் காண விரும்புகிறேன்" என) போற்றப்படுபவருமான உமர் (ரழி) அவர்களது ஆட்சியில், ஆயிஸா(ரழி)அவர்களின் சட்ட நுணுக்கங்கள் எந்தளவு பங்களிப்பு செய்தது என்பதையும் நாம் கவனிக்கும் போது தனது சிறு பராயத்திலமைந்த நபிகளாருடனான வாழ்க்கையின் போது அவர்கள் பெற்றிருந்த அறிவு நிலையின் உச்சத்தன்மையை அனுமானிக்கலாம்.

எனவே ஆயிஸா(ரழி) அவர்கள் முழு வளர்ச்சியடைந்த நிலையிலும் தெளிவான அறிவுள்ள நிலையிலுமே திருமணம் செய்துள்ளார்கள் என்பதும் அதனை கால இடைவெளியே எமது அறிவிற்கு தவறாக சித்தரிக்கின்றது என்பதையும் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.

இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் இஸ்லாம் அறிவியல் பூர்வமான, கால மாற்றங்களை தனக்குள் வாங்கிக் கொள்ளும், உலக அழிவுவரையும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் மார்க்கம் என்ற உண்மையையே. இதனால் இஸ்லாம் வயதுகளைக்கொண்டு சட்டங்களை இயற்றுமளவு மனிதர்களின் கையாடல்கள் நிறைந்த முட்டாள்தனமான மார்க்கமல்ல என்பதை நாமறியலாம்.

அறிவியல் பார்வையில் எடுத்துக்கொண்ட விமர்சனத்துக்கான விளக்கங்கள் இதனுடன் நிறைவுற்றாலும்; திருமண விடயத்தில் அதிக வயது வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? என்பதை ஆய்வு செய்வோம்.

-03-இஸ்லாத்தின் திருமணம் சட்ட வரையறை.



நாமாக நமது தலைக்குள் புகுத்திக்கொண்ட அடிப்படைவாத கருத்துக்களையெல்லாம் கலைந்தெறிந்து விட்டு இறைவனது சட்டங்களை ஆய்வு செய்வோம். ஆம் இஸ்லாம் பெண்களின் திருமணத்திற்கு வரையறுத்துள்ள சட்டங்களை இனி நோக்குவோம்.

பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது இரண்டு அங்கீகாரங்கள் மட்டுமே.

  • முதலாவது பெண்ணின் சம்மதம்.[அல்குர்ஆன்-4:19]
  • அடுத்தது அப்பெண்ணின் பொறுப்புதாரியின்(தகப்பன்) அங்கீகாரம்.
இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.

இவ்வரம்புகளை இஸ்லாம் கட்டாயப்படுத்துவதன் மூலம்;

பெண்பிள்ளைகள் நாட்களை எண்ணிக்கொண்டே பதினெட்டு வயதை தொட்டதும் திருட்டுத்தனமாக செய்யும் பதிவுத் திருமணத்தையும், அதே நேரம் அப்பெண்பிள்ளைகள் மீதான பெற்றோர்களின் திணிப்பு திருமணத்தையும் இஸ்லாம் வலுவாக தடுத்துள்ளதை அறியலாம்.
திருமணத்தின் மூலம் ஆண்களுக்கு இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள குடும்ப பொறுப்புகள் அவர்களை தனித்து முடிவெடுக்கச்செய்ய போதுமானதாகும்.
ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக்கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.


இவைகளிலிருந்து
வரையறுக்கப்பட்ட இவ்வுலக வாழ்வில் மனிதர்களுக்காக இறைவன் ஏற்படுத்தித்தந்துள்ள லௌகீக நன்மைகளை மனிதர்களிடமிருந்து பறிக்கும் அடக்குமுறையாளர்களின் அடிப்படைவாத திணிப்பே திருமணத்திற்கு வயது வரம்புகளை இடுவதும், மறு திருமணத்தை எதிர்ப்பதும், சந்நியாசத்தையும், பிரம்மச்சாரியத்தையும் இறைவனின் பெயரால் ஊக்குவிப்பதும் என்பதையும் உங்களது அறிவு சரி கண்டிருக்கும் என நம்புகிறேன்.

இங்கு நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் உலக மக்களுக்கான சட்டங்களாக அடையாளப்படுத்துமாறு திருக்குர்ஆன் மூலம் இறைவன் உத்தரவிடுகிறான்.
இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.

இவர்களது இருபத்தைந்தாவது வயதில் விதவையான நாற்பது வயதைக்கடந்த கதீஜா(ரழி) அவர்களை மணந்து தமது இளமைக்காலம் முழுதையும் அவர்களுடனான வாழ்வில் மட்டுமே செலவிட்டுள்ளார்கள். வாரிசுகளும் கூட நபி(ஸல்) அவர்களுக்கு முதல் மனைவியான கதீஜா(ரழி) அவர்கள் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது. இவர்களின் மரணத்தைத்தொடர்ந்தே தனது ஐம்பதாவது வயதிற்கு பின்னர் ஏனைய திருமணங்களை செய்துள்ளார்கள். அதிலும் ஆயிஸா(ரழி) அவர்களைத்தவிர மற்ற அனைவரும் விதவைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திருமணங்களே இஸ்லாமிய பெண்ணியல் சட்டங்கள் முழுதையும் உலகிற்கு வழங்கி இஸ்லாமிய சட்ட வரையறைகளை பூரணப்படுத்த முழுத்துணை நின்றுள்ளதைக்காணலாம்.
யாவற்றையும் அறிந்த சர்வவல்லமை மிக்கவனுக்கே புகழனைத்தும்.

-04-உங்களது அறிவுக்கு சவால் தரும் சிந்தனையை தூண்டும் கேள்வி.

ஒரு பெண் எட்டாவது வயதிலோ அல்லது அதற்கு முன்னரோ பருவமடைந்து குழந்தைப்பேற்றுக்கு தான் தயார் என விஞ்ஞான ரீதியில் அறிவிக்கின்றாள். இதனைக்கண்டு மனம் பொறுக்காத உங்களால் இறைவன் சமூக விரோத செயலை செய்தமைக்காக அவனுடன் தர்கிக்க முடியுமா? அதற்கான சக்தி உங்களிடம் உள்ளதா?

உங்களது விடை இவற்றிலொன்றாகவே இருக்கும்.

  • நாத்திகர்களாயின் அது இயற்கை அது பற்றி தர்க்கிப்பது முட்டாள் தனம் என்ற நக்கல் தொனியிலும்,
  • பல கடவுள் கொள்கையாளர்களாயின் முடியும் என்றும் அதற்கு புராணங்களே சாட்சி என்றும்,
  • இன்னும் இறைவனது பண்புகளை அறிந்த, மற்றும் அறியாத ஆத்திகர்களாயின் அது இறைவனது செயல் ....?
என்றும் விடை தருவீர்கள்.

நீங்கள் கூறிய இந்த இயற்கையையும், உங்களது கற்பனையில் நிலைகொண்டிருக்கும் கடவுள் குறித்த உருவங்களையும் இன்னும் நீங்கள் நம்பும் புராணங்களையும், வேதங்களையும் சடப்பொருட்களையும், சடமல்லாப்பொருட்களையும், இம்முழுப்பிரபஞ்சத்தில் காணும், மற்றும் காணாத அனைத்தையும் பரிபாலித்துக்கொண்டிருக்கும் ஒருவனைப்பற்றி ஆய்வு செய்ய திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவரையும் அழைக்கிறது. தான் உலக மக்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட அத்தாட்சி எனவும் ஓர் அதிசயம் எனவும் தன்னை ஆய்வு செய்வதற்கான வழிகளை திருக்குர்ஆன் விருப்புடன் திறந்து தந்துள்ளது. அதுவே உலக மக்களுக்கான கடமை என்று எச்ச்சரித்தும் நிற்கிறது.

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (திருக்குர்ஆன்-47:24)

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (திருக்குர்ஆன்-38:29)

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.(திருக்குர்ஆன்16:44)

அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக் குர்ஆன்-4:82)

என்று உலக மக்களிடம் வேண்டும் இத்திருக்குர்ஆன்;
  • இலக்கண இலக்கியங்களுக்கு அப்பால் தொடர்ந்து பேசுகிறது,
  • வரலாறுகளையும் பேசுகிறது,
  • பொருளாதாரத்தையும் பேசுகிறது,
  • விஞ்ஞானத்தையும் பேசுகிறது,
  • படைப்புகளின் இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறது,
  • எதிர்காலத்தையும் முன்னறிவிப்பு செய்கிறது,
  • உலக மானுட வாழ்வுகளுக்கான முழுச்சட்டங்களையும் வரையறுத்து பேசுகிறது.

இவ்வாறு பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கியதுடன் நில்லாது நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து சொல்கிறது முடிந்தால் தன்னிடமுள்ள முரண்பாடுகளை வெளிக்கொண்டு வருமாறும் தான் சுமந்திருக்கும் ஆயிரக்கணக்கான வசனங்களைப்போன்று ஒருவசனத்தை உருவாக்கிக் காட்டுமாறும் கூறி நிற்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இது இறைவனைத்தவிர மனிதனாலோ வேறெந்த இலத்திரனியல் உபகரணங்களாலோ செய்ய முடியாத காரியமாகும்.

ஆக எமது சிற்றறிவைக்கொண்டு இறைவனது பண்புகளையும் அவனால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும் ஆராய்வதற்கு நேரத்தை வீணாக்காது இறைவனது இருப்பையும் அவனது கட்டளைகளையும் ஆராய முற்படுவதே மனிதர்களின் முன்னுள்ள கடமையாகும் என்பதை அச்சத்துடன் உணர்ந்து கொள்ள முற்படுங்கள்.

(நபியே!)நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன்-2:99)

நண்பர்களே! கிளை விடயங்களால் ஒருபோதும் இஸ்லாத்தின் எழுச்சியையும் இறைவனின் சத்தியத்தையும் மறைத்துவிட முடியாது. முதன்மையான விடயமான இறைவனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதனைத்தொடர்ந்து அவனது சட்டங்களை கடைபிடிப்பதன் தார்மீக கடமைகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கால விரயத்தால் மரணத்திற்கு பின்னரான முடிவில்லா வாழ்க்கையில் நட்டமடைந்து விடாதீர்கள்.


13 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    நிஸார்தீன் அவர்களுக்கு,

    நீங்கள் குறிப்பிட்ட இணைய தளத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில் தோன்றிய கருத்துக்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

    உங்கள் இணையதளத்திலிருந்து
    மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது. ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம். ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களது உடல் வளர்ச்சியின் வேகம் வித்தியாசப்படுகிறது என்பதையே இவ்வாய்வு உணர்த்துகிறது. இதனைக்கொண்டு "இன்னும் ஐம்பது நூற்றாண்டுகள் கழிந்த பின் விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதனின் ஆயுள் ஐநூறு வருடங்களாக அதிகரிக்கும்" என்ற எடுகோளுடன் எதிர்காலத்தை ஆராய்வோம். அவ் வருங்கால சமூகம் இன்றைய பதினெட்டு வயது திருமணத்தை நிச்சயமாக எதிர்க்கவே செய்யும். மூர்க்கத்தனமானவர்களாக இன்றைய ஆண்களை அச்சமூகம் அடையாளப்படுத்தும். இது அடிப்படைவாத கருத்து என்பதை அழுத்தமாக வாதிட வேண்டியது எமது கடமையாகும். ஆக திருமணத்திற்கு உடல் வளர்ச்சியையே கருத்திலெடுக்க வேண்டுமே தவிர வருடங்களையல்ல. ஆயிஸா (ரழி) அவர்கள் மிக சாதாரணமாகவே தமது திருமண வயதினை அறிவித்துள்ளதனைக்கொண்டு முழு வளர்ச்சியடைந்த நிலையிலே திருமணம் செய்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
    கவனத்திற்கு
    பெண்களின் சராசரியான பருவ வயது பதினேழு என்பதே அன்றைய மார்க்க அறிஞர்களின் கணிப்பு ( ஆதாரம் பத்தஹுல் பாரி)
    பருவமடையாத பெண்களுடன் கூடுவது அன்றைய அரேபியர்களின் வழக்கம் (ஆதாரம் அல் குர் ஆன் 65:4)
    நம்முடைய (என்னுடைய) ஆயுள் இன்று இருநூறு ஆண்டுகள் அதிகமாக அதிகரிக்கவில்லை.
    உண்மையில் அன்றைய மக்களுக்கு மிக நீண்ட ஆயுள் இருந்ததை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை

    உங்கள் இணையதளத்திலிருந்து
    -02- லௌகீக தன்மையிலிருந்து சமூக நலப் பார்வை.
    2. இனி எமது அறிவைக்கொண்டு இத்திருமணத்த்தின் லௌகீக தன்மைகளை நாம் ஆராயலாம். இறைவன் ஒரு பெண்ணை குழந்தை பேற்றுக்கு தயார்படுத்திவிட்டான் என்பதை குறிப்பதே பெண் பருவமடைதல் என்பதாகும்……

    கவனத்திற்கு

    உங்களது அல்லது மிக நெருங்கிய உறவில் உள்ள பெண் குழந்தை எட்டாவது வயதிலோ அல்லது அதற்கு முன்னரோ பருவமடைந்து குழந்தைப்பேற்றுக்கு தயார் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களது செயல் என்னவாக இருக்கும்?
    நபி (ஸல்) அவர்களது தோழர்கள் மட்டுமல்ல அவரது எதிரிகளும் கேட்கவில்லை காரணம் என்ன? சிறுமிகளை குடும்ப உறவில் ஈடுபடுத்துவது அன்றைய அரேபியர்களின் வழக்கம் எனவே யாருக்கும் தவறாக தெரியவில்லை.

    உங்கள் இணையதளத்திலிருந்து
    3. ஆயிஸா (ரழி) அவர்கள் முழு வளர்ச்சியுடன் தெளிவான அறிவுள்ள நிலையிலேயே திருமணம் செய்துள்ளதனையும் கால இடைவெளியே எமது அறிவிற்கு இதை தவறாக சித்தரிக்கிறது என்பதும் ஆதாரபூர்வமானதாகும். பண்டைய காலங்களில் மனிதர்களால் எழுதப்பட்ட புராணங்கள் (உதாரணம்: மனு சாஸ்த்திரம்) இதற்கு மேலும் வலு சேர்க்கிறது.
    கவனத்திற்கு

    ஆறுவயது குழந்தைக்கு தெளிவான அறிவு அதாவது ஐம்பது வயது முதியவருடன் இல்லற வாழ்கையில் ஈடுபடும் அளவுக்கு தெளிவான அறிவு ?
    ஆயிஷா ​​​​​​​​(ரலி) அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)
    அன்றைய காலத்தில் ஒன்பது வயது பெண் குழந்தைக்கு என்ன உடலுறவு கல்வி அறிவு பெற்றிருக்க முடியும்?
    மனு சாஸ்த்திரத்தில் இருந்தால் இறைவனின் அங்கீகாரம் கிடைக்ககுமா?
    கால இடைவெளியே எமது அறிவிற்கு இதை தவறாக சித்தரிக்கிறது என்றால் காலத்தை கடந்த பார்வை இல்லாதவனா இறைவன்?

    உங்கள் இணையதளத்திலிருந்து
    4. நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்.
    கவனத்திற்கு
    அவரது முன் உதாரணத்தை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?.
    நீங்கள் ஏன் பின்பற்றவில்லை? (உங்கள் வீட்டில் ஆறுவயது பெண் குழந்தைகள் இல்லையென்று நினைக்கிறேன்)
    மற்றவர்களையும் பின்பற்ற வலியுறுத்தவில்லை?.
    உங்கள் இணையதளத்திலிருந்து
    5. ஒரு பெண் எட்டாவது வயதிலோ அல்லது அதற்கு முன்னரோ பருவமடைந்து குழந்தைப்பேற்றுக்கு தான் தயார் என விஞ்ஞான ரீதியில் அறிவிக்கின்றாள். இதனைக்கண்டு மனம் பொறுக்காத உங்களால் இறைவன் சமூக விரோத செயலை செய்தமைக்காக அவனுடன் தர்கிக்க முடியுமா? அதற்கான சக்தி உங்களிடம் உள்ளதா?
    கவனத்திற்கு
    ஒருவேளை எட்டாவது வயதிலோ, அதற்கு முன்னரோ அல்லது பிறந்தவுடனோ பருவமடைந்தால் அது இறைவனின் நாட்டமே இதில் தர்கத்திற்கு ஒன்றும் இல்லை என்பது என்னுடைய பதில். அதற்காக அந்த குழந்தையுடன் குடும்ப உறவில் ஈடுபடுமாறு உங்களிடம் (நபி (ஸல்) அவர்கள்) இறைவன் கூறினானா?
    உங்கள் இணையதளத்திலிருந்து
    6. நபி (ஸல்) அவர்களுடைய மனைவிகளில் ஆயிஸா (ரழி) அவர்கள் மட்டுமே எழுதத் தெரிந்த கல்வியறிவுள்ளவர்கள் என்பதனால் இத்திருமணத்தின் பலன்களை இஸ்லாம் இன்றளவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது . (இஸ்லாத்திற்கு முன்னைய அறியாமைக்கால பெண்களிடம் கல்வியறிவு ஓரிருவரைத்தவிர இருந்ததில்லை.)
    கவனத்திற்கு
    ஆயிஸா(ரழி) அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் மிக உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலஆயிரம் மக்கள் முழுமையாக இஸ்லத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா?

    உங்கள் இணையதளத்திலிருந்து
    7. அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்லாயிரக்கணக்கான செய்திகளை உலகிற்கு அறிவித்தவரும் தனது திருமண வயதையும் அறிவித்தவருமான ஆயிஸா (ரழி) அவர்கள் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் வினவவோ அறிவிக்கவோ முயற்சிக்கவில்லை.
    கவனத்திற்கு
    ஆயிஸா (ரழி) அவர்கள் தான் பிழிந்தெடுக்கப்பட்டதை உணரும் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை.
    உங்கள் இணையதளத்திலிருந்து
    நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் மணந்தார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் குடும்ப உறவு கொண்டார்கள்.
    அறிவிப்பவர்-ஆயிஸா(ரழி)[புஹாரி-3894,5133, 5134, 5156, 5158, 5160.]
    8. பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது இரண்டு அங்கீகாரங்கள் மட்டுமே.
    முதலாவது பெண்ணின் சம்மதம்.
    அடுத்தது அப்பெண்ணின் பொறுப்புதாரியின்(தகப்பன்) அங்கீகாரம்.
    கவனத்திற்கு
    பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன் ?
    ​​பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?
    ஆறுவயது குழந்தையிடம் மனப்பூர்வமான சம்மதம் பெற்றது எவ்வாறு?
    ‘அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா​​​​​​​​ (ரலி) அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா​​​​​​​​ (ரலி) அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், நபி (ஸல்) அவர்களின் வழி முறை ஏன் மறைக்கப்பட்டது? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மார்க்க அறிஞர்களால் தடைவிதிக்கப்பட்டது ஏன்?
    அபூக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டதால் ஒன்பது வயதான போது ஆயிஸா (ரழி) அவர்களுன் குடும்ப உறவு கொண்டார்கள் இல்லையெனில் ஆயிஸா (ரழி) அவர்களின் ஆறுவயதிலேயே குடும்ப உறவில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள்.
    அந்த மூன்றுவருடங்களுக்குள் எத்தனை திருமணங்கள் செய்து கொண்டார் ? ஏன்?

    உங்கள் இணையதளத்திலிருந்து

    இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விடயம் இஸ்லாம் அறிவியல் பூர்வமான, கால மாற்றங்களை தனக்குள் வாங்கிக் கொள்ளும், உலக அழிவுவரையும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் மார்க்கம் என்ற உண்மையையே. இதனால் இஸ்லாம் மனிதர்களின் வயதுகளைக்கொண்டு சட்டங்களை இயற்றுமளவு முட்டாள்தனமான மார்க்கமல்ல என்பதையறியலாம்
    கவனத்திற்கு

    கால மாற்றங்களை தனக்குள் வாங்கிக் கொள்ளும் தன்மை இத்திருமண விஷயத்தைத் தவிர மற்றவவைகளில் காணமுடியவில்லை ஏன்?
    முரண்பாடுகள் யாரிடம் உள்ளது?

    மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது. ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம். (இது உங்களின் வாசகம்தான்)

    ஆரம்பித்த இடத்தில் முடிக்கிறேன் – கவனித்தீர்களா?


    இன்னும் எத்தனை ஆட்களை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்கள், என்னை வெற்றி கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களின் வழிமுறை சரி என்று நீங்கள் முடிவு செய்தால்.

    இவைகளுக்கு உங்கள் பதில் மவுனம்தானே?

    என்றும் அன்புடன்


    Dhajjal

    dhajjal666@gmail.com

    ReplyDelete
  2. #########///////ஆயிஷா ​​​​​​​​(ரலி) அவர்கள் தான் மிகச்சிறிய பெண்ணாகவும் மிகவும் எடை குறைவாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார் (புகாரி 2661, 3388,4141,4750,4757)//////////////////

    ஒரே சம்பவத்தையே அனைத்தும் குறிக்கின்றன. ஆயிஷா ​​​​​​​​(ரலி) அவர்கள் முழு வளர்ச்சியடைந்த நிலையில், மிகத்தெளிவான அறிவுள்ளவர்களாக இக்காலத்தில் இருந்தார்கள் என்பதற்கு இவ்வறிவிப்புகள் மேலும் உங்களுக்கு துணை நின்றிருக்க வேண்டுமே தவிர எவ்வாறு உங்களது சிந்தனையை முரண்பட வைத்தது என்பது எனக்கு புரியவில்லை.
    01.சகல பெண்களுடனும் (சிறுமிகளுடனல்ல) தன்னையும் ஒருவராக ஒப்பிடுகிறார்கள்.
    "அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கு அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன். "[புஹாரி :4141,4750]
    02.நய வஞ்சகர்களால் அவதூறு பேசப்படுமளவு முழுமையாக வளர்ந்துள்ளார்கள்.
    03.இவ்வாறான பிரச்சனை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஒரு சிறுவனை ஆயிஷா ​​​​​​​​(ரலி) அவர்களுக்கு வழித் துணையாக நபி (ஸல்) அனுப்புகிறார்கள் . சிறுவனுக்கும் ஆயிஷா ​​​​​​​​(ரலி) அவர்களுக்குமான தெளிவான வித்தியாசத்தை இது காட்டுகிறது.
    "இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்." [புஹாரி :4757]
    இன்னும் அதிகமாக அவர்களது அறிவுத்திறமையை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது. இச்சம்பவத்தை தெளிவாக அறிந்துகொள்ளுவதற்கான தொடுப்பு. http://www.annajaath.com/?p=299

    ##########நான் எழுதியுள்ள கட்டுரையினுள்ளேயே உங்களது ஏனைய சகல கேள்விகளுக்குமான விடைகள் அடங்கியுள்ளதை அறியத்தருவதோடு அவைகளையே மீண்டும் பதில்களாக பிரதியிட்டுள்ளேன். மீண்டுமொருமுறை நிதானமான உணர்ச்சிக்கலவாத வாசிப்பும் ஆழமான தேடலும், உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உங்களுக்காக அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். இவ்வுலகில் சாந்தியும் மன நிறைவுமான வாழ்க்கையை அல்லாஹ் உங்களுக்கு தருவதோடு மறுமையிலும் வெற்றியைத்தரவேண்டுகிறேன்.############

    ##########/////பெண்களின் சராசரியான பருவவயது பதினேழு என்பதே அன்றைய மார்க்க அறிஞர்களின் கணிப்பு ( ஆதாரம் பத்தஹுல் பாரி)///////////////////////
    சராசரியான ???
    பத்தஹுல் பாரி???
    மார்க்க அறிஞர்கள் ???
    இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை.

    ###########////பருவமடையாத பெண்களுடன் கூடுவது அன்றைய அரேபியர்களின் வழக்கம் (ஆதாரம் அல் குர் ஆன் 65:4) //////////
    ?????????????????????குறித்த அல்குர்ஆனிய வசனம் வருமாறு:

    மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். (அல்குர்ஆன் 65:4)
    இத்தா=கணவனின் மரணத்தின் பின்னான சடங்கு பற்றியது.

    ###########//////////நம்முடைய (என்னுடைய) ஆயுள் இன்று இருநூறு ஆண்டுகள் அதிகமாக அதிகரிக்கவில்லை.///////////////

    ###########////////உண்மையில் அன்றைய மக்களுக்கு மிக நீண்ட ஆயுள் இருந்ததை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.////////////
    ஆதம் அலை அவர்களுக்கும் , ஆறாம் நூற்றாண்டு அரேபியர்களுக்கும், எமக்கும், எதிர்கால சந்ததியினருக்குமான சராசரி ஆயுள் மாறுபட்டதே என்பது மறுதலிக்க முடியாத உண்மை.


    ###########/////////உங்களது அல்லது மிக நெருங்கிய உறவில் உள்ள பெண் குழந்தை எட்டாவது வயதிலோ அல்லது அதற்கு முன்னரோ பருவமடைந்து குழந்தைப்பேற்றுக்கு தயார் என்பதை நீங்கள் உணர்ந்தால் உங்களது செயல் என்னவாக இருக்கும்?///////////////

    இரண்டு காரணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

    * உடல் வளர்ச்சி போதாமை.
    * முதிர்ச்சியற்ற அறிவு நிலை.


    ##########//////////நபி (ஸல்) அவர்களது தோழர்கள் மட்டுமல்ல அவரது எதிரிகளும் கேட்கவில்லை காரணம் என்ன? சிறுமிகளை குடும்ப உறவில் ஈடுபடுத்துவது அன்றைய அரேபியர்களின் வழக்கம் எனவே யாருக்கும் தவறாக தெரியவில்லை./////////

    "ஆக பெண்ணாயின் பொறுப்பாளரினது சம்மதத்துடன் தனது விருப்பப்படி எந்த வயதுடைய கணவனையும் துணைவனாக தேர்ந்தெடுக்க இஸ்லாம் வழியேற்படுத்திக்கொடுக்கிறது. ஆணாயின் அவனது விருப்பம் மட்டுமே போதுமானதாகும் தன்னை விட மூத்த அல்லது இளைய வயது பெண்களை திருமணம் செய்ய அவன் நாடலாம். அதே நேரம் ஆண்களானாலும் பெண்களானாலும் சரியே துணைவர் மரணிக்கும் போது அடுத்த திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்தி ஊக்குவிக்கவும் செய்கிறது. திருமண உறவுகளை இறைவணக்கமாகவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது."

    "நபி(ஸல்) அவர்கள் மனித வாழ்க்கைக்காக இறைவனால் நியமிக்கப்பட்ட முன்னுதாரணமாகும். இவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் உலக மக்களுக்கான சட்டங்களாக அடையாளப்படுத்துமாறு திருக்குர்ஆன் மூலம் இறைவன் உத்தரவிடுகிறான்.
    இவர்கள் பொறுத்தமில்லாத மூட சம்பிரதாய சடங்குகளையும், வணக்க வழிபாடுகளையும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத சமுதாயத் திணிப்புகளையும் தகர்த்தெறிந்து தனது ஒவ்வொரு செயல்கள் மூலமும் உலக மக்களுக்கு முன் உதாரணமானவராகவே திகழ்ந்துள்ளார்கள்."


    ###########///////மனு சாஸ்த்திரத்தில் இருந்தால் இறைவனின் அங்கீகாரம் கிடைக்ககுமா?//////////

    மனித வாழ்வுக்கு மிக சிறந்த நீதிகளை கூறிய இம் மனுசாஸ்திரம் திருமண விடயத்தில் எம்மை முரண்பட வைக்கும் நீதியை தருவது ஏன்?
    மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது. ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம். ஒவ்வொரு கால கட்டங்களிலும் மனிதர்களது உடல் வளர்ச்சியின் வேகம் வித்தியாசப்படுகிறது என்பதையே இவ்வாய்வு உணர்த்துகிறது.

    "இன்னும் ஐந்து முறை புவி சூரியனைச்சுற்றி வந்தாலே மனிதர்களின் அறிவும் திடகாத்திரமும் பெருகும் என்றும், புவி சுழற்சியை கொண்டே சட்டங்களை இயற்றுமாறும் இறைனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எம்மிடமில்லை. அது அவனது ஆற்றலுக்குட்பட்ட விடயம். இஸ்லாம் முக்காலமும் உணர்ந்த மார்க்கமேயன்றி முட்டாள்தனமான மார்க்கமல்ல என பறைசாற்ற இதுவும் துணை நிற்கிறது."

    ############/////கால இடைவெளியே எமது அறிவிற்கு இதை தவறாக சித்தரிக்கிறது என்றால் காலத்தை கடந்த பார்வை இல்லாதவனா இறைவன்?//////
    ///எமது அறிவிற்கு///

    "ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?" என்று கேட்பான். "

    "ஒரு நாள் அல்லது ஒரு காலம் பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!" என்று அவர்கள் கூறுவார்கள்."
    "ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!" என்று (இறைவன்) கூறுவான்."((திருக்குர்ஆன்-23:112,113,114)


    #############/////////அவரது முன் உதாரணத்தை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை?.
    நீங்கள் ஏன் பின்பற்றவில்லை? (உங்கள் வீட்டில் ஆறுவயது பெண் குழந்தைகள் இல்லையென்று நினைக்கிறேன்)
    மற்றவர்களையும் பின்பற்ற வலியுறுத்தவில்லை?. ////////

    இரண்டு காரணங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

    * உடல் வளர்ச்சி போதாமை.
    * முதிர்ச்சியற்ற அறிவு நிலை.




    ###########/////////ஒருவேளை எட்டாவது வயதிலோ, அதற்கு முன்னரோ அல்லது பிறந்தவுடனோ பருவமடைந்தால் அது இறைவனின் நாட்டமே இதில் தர்கத்திற்கு ஒன்றும் இல்லை என்பது என்னுடைய பதில். அதற்காக அந்த குழந்தையுடன் குடும்ப உறவில் ஈடுபடுமாறு உங்களிடம் (நபி (ஸல்) அவர்கள்) இறைவன் கூறினானா?//////////////////////////

    இறைவனது ஏற்பாடே ஆயிஸா(ரழி)அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமான திருமணம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த ஆதாரங்களைக்கொண்டு இவ்வேற்பாட்டினைச் செய்த இறைவனை ஆராய முற்பட வேண்டுமே தவிர அவனது சட்டங்களை ஆராய்வது வீணான கால விரயம் என்றே நான் கருதுகிறேன்.

    [ஆதாரம் புகாரி-அறிவிப்பவர்-ஆயிஸா(ரழி)-5078,7012]


    ###########/////////ஆயிஸா(ரழி) அவர்களைத் திருமணம் செய்கின்ற வேளையில் இஸ்லாம் மிக உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. பலஆயிரம் மக்கள் முழுமையாக இஸ்லத்தில் இருந்தனர் அவர்களில் கல்வியறிவு பெற்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரும் இல்லையா?////////

    முதலில் இத்திருமணம் மூலம் ஆயிஸா(ரழி)அவர்கள் வாயிலாக ஏக இறைவன் இஸ்லாத்திற்கு செய்ய நாடியவைகளை எமது அறிவிற்கு எட்டிய மட்டும் காண்போம். (அதிலொன்றே)
    பெண்ணியல் சட்டங்களை நபி(ஸல்) அவர்களிடம் பெற்று அறிவித்தவர்களில் இவரே முதன்மை இடத்திலும் உள்ளார். (மற்றவைகளை இறைவனே அறிவான்.)


    ###########///////////ஆயிஸா (ரழி) அவர்கள் தான் பிழிந்தெடுக்கப்பட்டதை உணரும் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இல்லை. //////////
    இஸ்லாம் நபி(ஸல்) அவர்களின் மனைவியர்களுக்கு தங்களது கருத்துகளை முன்வைக்கும் உரிமையை கொடுத்ததுடன் நில்லாது அதையே அவர்களது கடமையாக எதிர்பார்த்தும் நின்றது. இச்சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தமது திருமணங்களின் திருப்தியற்ற தன்மையினை இவர்களில் ஒருவர் வெளிப்படுத்தியிருந்தாலும் கூட; உலகின் பெரும் சாம்ராஜ்யமாக முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் துணை கொண்டு (பொருளாதார பலத்தால் அல்ல) மன உறுதிமிக்க நம்பிக்கையாளர்களால் கட்டியெழுப்பப்பட்டிருந்த இஸ்லாம் அந்நம்பிக்கையாளர்களின் மன உறுதியைத் தகர்க்கச்செய்து சிதறுண்டிருக்க வழிகோளியிருக்கும். இதுவும் கூட அல்லாஹ் பகிரங்கப்படுத்தியுள்ள இறையத்தாட்சிகளில் ஒன்றே எனலாம்.

    ############//////////////////கால மாற்றங்களை தனக்குள் வாங்கிக் கொள்ளும் தன்மை இத்திருமண விஷயத்தைத் தவிர மற்றவவைகளில் காணமுடியவில்லை ஏன்? முரண்பாடுகள் யாரிடம் உள்ளது? ///////////////////////////////

    ????????????????????????????? கேள்வி புரியவில்லை அதற்கும் இக்கட்டுரையினுள் விடையிருக்கலாம்.

    ############//////////மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயம் இது. ஆம் மனிதர்களால் எழுதப்படும் இந்நூல்கள் அவ்வவ் கால சூழ்நிலைகளிற்கேற்ப எழுதப்பட்டுள்ளதை இதிலிருந்து அறியலாம். (இது உங்களின் வாசகம்தான்)//////////

    இவ்வளவையும் பேசியதுடன் நில்லாது (அல்குர்ஆன்) மார்தட்டி சொல்கிறது முடிந்தால் தன்னிடமுள்ள முரண்பாடுகளை வெளிக்கொண்டு வருமாறும் தான் சுமந்திருக்கும் ஆயிரக்கணக்கான வசனங்களைப்போன்று ஒருவசனத்தை உருவாக்கிக் காட்டுமாறும் கூறி நெஞ்சுரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இது இறைவனைத்தவிர மனிதனாலோ வேறெந்த இலத்திரனியல் உபகரணங்களாலோ செய்ய முடியாத காரியமாகும்.

    ஆக எமது சிற்றறிவைக்கொண்டு இறைவனது பண்புகளையும் அவனால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும் ஆராய்வதற்கு நேரத்தை வீணாக்காது இறைவனது இருப்பையும் அவனது கட்டளைகளையும் ஆராய முற்படுவதே மனிதர்களின் முன்னுள்ள கடமையாகும் என்பதை அச்சத்துடன் உணர்ந்து கொள்ள முற்படுங்கள்.

    நண்பர்களே! கிளை விடயங்களால் ஒருபோதும் இஸ்லாத்தின் எழுச்சியையும் இறைவனின் சத்தியத்தையும் மறைத்துவிட முடியாது. முதன்மையான விடயமான இறைவனது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதனைத்தொடர்ந்து அவனது சட்டங்களை கடைபிடிப்பதன் தார்மீக கடமைகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கால விரயத்தால் மரணத்திற்கு பின்னரான முடிவில்லா வாழ்க்கையில் நட்டமடைந்து விடாதீர்கள்.

    உங்களது வாசித்து கிரகிக்கும் தன்மையில் ஏற்பட்டுள்ள குறைவே இக்கேள்விகளை அடுக்க காரணமாகிருக்கின்றதாக கருதுகின்றேன

    "அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்."(-03:07)

    ReplyDelete
  3. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குரடாகவில்லை எனினும், நெஞ்சக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன. (அல்குர்ஆன்-22:46)

    (நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, "நான் உங்கள் மீது பொருப்பாளன் அல்ல" என்று (நபியே!) நீர் கூறிவிடும். (அல்குர்ஆன்-6:66)

    ###இந்த விடயத்தில் எனது ஒற்றைவரி விளக்கம் "இது இறைவனது ஏற்பாடு" என்பதே.[ஆதாரம் புகாரி-அறிவிப்பவர்- ஆயிஸா(ரழி)-5078,7012] இனி அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் சந்தேகங்களை பறிமாறிக்கொள்வதையே அல்லாஹ் என் மீது பொறுப்பாக்கியுள்ளான். அதற்கான கூலியாக நான் அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பது சுவனமே. எந்தவித பயனையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தராத சைத்தானின் ஏற்பாடான வீண் விவதாங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன். ####

    "நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (அல்குர்ஆன்-6:68)

    நேரத்தை விவாதங்களில் விரயமாக்காது சத்தியத்தை உலக மக்களிடம் கொண்டு சேருங்கள் என்பதே இதற்கான விளக்கமாக நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. எல்லாம் அவன் செயல்?
    தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்.
    … towards origin என்ற என்னுடைய தொகுப்பிலிருந்து …
    இறைவன் வானவர்களுடன் நிகழ்த்திய உரையடலை நினைவு கூறுங்கள்.
    உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது, “நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள். “ நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்’’ என்று அவன் கூறினான்.
    (திருக்குர்ஆன் 2:30)
    உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….
    இறைவன் தன் முடிவை வானவர்களிடம் வெளியிட்டான். இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற இறைவனால் படைக்கப்பெற்ற மலக்குகளிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன?. இதில் மலக்குகளின் முடிவை அறிவதும், இரண்டாவது கருத்து தேவை என்ற இருநிலைகள் தெரிகிறது. ஆனால் மலக்குகளின் கருத்தை இறைவன் ஏற்கவில்லை.
    “நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள்…
    இது இறைவனின் முடிவிற்கு ஒரு மாற்று கருத்து. இறைவனின் முடிவை மறுபரிசிலனை செய்ய வைக்கப்படும் வேண்டுகோள். மனிதனை படைப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்ற மலக்குகளின் முடிவு. இதில் அனைத்து மலக்குகளின் முடிவும் ஒன்றே என்பதும் தெளிவாகிறது. இவர்கள் அனைவரும் ஒரே கருத்தின் கீழ் வந்தது எவ்வாறு? மாற்று கருத்தை முன்மொழிந்தது யார்?
    மனிதன் தெளிவற்றவன், குழப்பவாதி, போர்க்குணம் கொண்டவன் என்பதே மலக்குகளின் கணிப்பு. இறைவன், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை (ஒருமை) பூமியில் படைக்க இருப்பதாக மட்டுமே இங்கு தெரிவிக்கிறான். குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இங்கு இறைவன் மனிதனைப் படைக்க இருப்பதாக மட்டுமே தெரிவிக்கிறான். இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?.
    வானவர்களுக்கு கிடைத்த ஒரே செய்தி இறைவன், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!. ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற வார்த்தையிலிருந்து இறைவனின் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், மனிதனை அவன் விருப்பத்திற்கு பூமியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க இறைவன் முடிவு செய்து விட்டான் என மலக்குகள் உணர்ந்தனர். இறைவனின் ஆட்சி அல்லாமல் வேறு யாருடைய ஆட்சி எங்கு இருந்தாலும் குழப்பம்தான் ஏற்படும் என குறிப்பால் உணர்ந்து மறுப்பு தெரிவித்தனர் என்பதே அறிஞர்களின் வாதம்.
    மேலும் ‘இறைவனின் பிரதிநிதி’ என்ற வார்த்தையிலிருந்து மனிதனின் குணத்தைப்பற்றியும் அவனுடைய உடலமைப்பற்றி அதாவது மனிதனுடைய எழும்புகளை சதை மற்றும் தோலால் மூடப்பட்டிருக்கும். அதற்குள் நரம்பு மற்றும் இரத்த ஓட்டங்களும், சுவாச உறுப்புக்கள், ஜீரண, கழிவு நீக்கும் உறுப்புக்களும் சிறப்பாக பகுத்தறிவுடன் கூடிய மூளை உள்ளவனாக இருப்பான் என மலக்குகள் உணர்ந்தனர் என்றால், இறைவன் மனிதனைப் போல இரத்தமும் சதையுமாகவும், குழப்பமான குணமுடையவனாகவும் பொருள் விளங்க நேரிடும். காரணம் அதற்கு முன் மனிதனை யாரும் கண்டதில்லை. அவன் இறைவனின் சிந்தனையில் மட்டுமே இருந்தான்.
    மலக்குகளால் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்து மலக்குகளின் உள்ளத்தில் உதிக்கச் செய்தவனே எல்லாம் வல்ல இறைவன்தான். மலக்குகள் இதில் கருவி மட்டுமே. இறைவனுடைய படைப்புகளின் ஒவ்வொரு அசைவும் இறைவனின் நாடியவாறு மட்டுமே நிகழ்கிறது அது அவனுக்கு மிக எளிதானதுதான். இறைவனும் திருமறையில் இதை பல இடங்களில் குறிப்பிடுகிறான். இறைவனே ஒரு கருத்தை வெளியிட்டு, அதற்கொரு மாற்று கருத்ததையும் மலக்குகளின் மூலமாக வெளியிட்டுக் கொண்டான் என்று கூறினால் இறைவன் தனக்கு தானே பேசிக் கொள்ளும் தன்மையுடையவன் என்று முடிவு செய்ய நேரிடும்.
    ஆதமுக்கு ஸூஜூது செய்ய மலக்குகளிடம் ஆணையிட்ட பொழுது இப்லீஸ் தவிர மற்றவர்கள் அனைவரும் ஸூஜூது செய்தனர்.
    (திருக்குர்ஆன் 7:12)
    மனிதனைப் படைப்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும், இறைவன் ஆணையிட்டதும் மலக்குகள் ஆதமுக்கு ஸூஜூது செய்தனர். மேற்கண்ட இந்தவசனமும் மலக்குகள் மற்றும் ஜின் இனங்களின் பகுத்தறிந்து செயல்படும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. முன்பு வாதிட்ட முறையைப் போல இறைவனின் விருப்பத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெறுகிறது வாதிட்டால், மலக்குகள் வழிபடும் இயந்திரம் என பொருள் விளங்க நேரிடும், அவர்களின் தூய்மை பொருளற்று வேடிக்கையாகி விடும். இப்லீஸ் தற்பெருமை கூறி இறைவனின் ஆணையை ஏற்கவில்லை என்று குறை கூறுவது இறைவன் தன்னைதானே குறை கூறியதாக பொருள் தானாக வரும்.
    …“ நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
    … நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக்கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் செல்லவில்லையா? என்று அவன் கூறினான்.
    மலக்குகளின் மாற்றுக் கருத்திற்கு இறைவனின் பதில். இந்த மறுமொழியால், மலக்குகளின் கருத்து அவர்களுடைய பகுத்தறிவால் கூறப்பட்டுள்ளது என உறுதியாக சொல்லலாம். இறைவனும் மலக்குகளின் பதிலை மறுக்கவில்லை.
    எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது என்று மனிதனுக்கு தெரியாது. ஆனால் கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்களும், அநீதிகளும், படுகொலைகளும், கலவரங்களும் இன்றும் தீவிரமாக தொடர்கிறது இது நாளை இன்னும் தீவிரமாகவும் கொடூரமாகவும் தொடரும் என்பது எல்லோரும் மிகத் தெளிவாக உணர்ந்த உண்மை.
    எனவே மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது. மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை. இறைவனின் படைப்பினங்களின் சிந்தனையில் உருவாகும் கருத்துக்களுக்கும், செயல்களுக்கும் இறைவன் காரணமாக இருக்க முடியாது என்பதை கீழ்வரும் வசனமும் உறுதி செய்கிறது

    இன்னும் நிச்சயமாக மனிதர்களும், ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்களென நிச்சயமாக நாம் எண்ணியிருந்தோம்.
    (திருக்குர்ஆன் 29:5)
    நாளை நிகழ்வதை இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது, விதியை நிர்மானிப்பவனும் செயல்படுத்துபவனும் இறைவனே!. இறைவன் முன்பே தீர்மானித்ததைப்போல ஒவ்வொரு நிகழ்வும் நிறைவடைகிறது என்ற கருத்து கேள்விக்குறியாகிறது. விதி இருப்பது உண்மை என்றால் விதியை முடிவு செய்பவர் யார்?

    இறைவன் ஆதாமிடம் கூறியதை நினைவு கூறுங்கள்,
    “சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப் பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்ட்டவராவீர். ”
    ( அல் குர் ஆன் 2:35, 7:19-28, 20:120-123)
    “நீர் பசியில்லாதிருப்பதும், நிர்வாணமாகது இருப்பதும் இதில் உண்டு.”
    “இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”
    சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்துவிடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.
    (திருக்குர்ஆன் 20.118-120)
    இப்லீஸ்ன் மோசடியால் மீறினர், விளைவு தங்ளுடைய வெட்கத்தலங்கள் வெளியாயின. விளைவு காமம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனிதர்களின் பெருக்கம், குழப்பம்.


    மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.
    பிறகு அவனைக் கீழானவர்களிலும் மிக கீழானவனாய் நாம் ஆக்கினோம்.
    (திருக்குர்ஆன் 94: 4, 5)

    இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விருப்பமா?
    இந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. இறைவனின் விருப்பம் மனிதர்களை பூமியில் படைப்பது மேற்கண்ட வசனம் அதை உறுதி செய்கிறது. ஆதாம் தடுக்கப்பட்ட பழத்தை சுவைக்கவில்லை என்றாலும் மனிதர்களை பூமியில் படைப்பதை உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்?.
    மது அருந்தினால் போதை உண்டாகும், அறிவு அழிந்து போகும் எனவே மது தடை செய்ப்பட்டது. மதுவினால் போதை ஏற்படவில்லை என்றால் அது ஒரு சாதரண திரவம்தான். எனவே தடை மதுவின் மீதல்ல அனைத்து வகையான போதையின் மீது. தடுக்கப்பட்ட பழத்தை சுவைத்ததால் ஆதாம் பெற்றது பாலியல் உணர்ச்சியை. எனவே பாலியல் உணர்ச்சியை பெற்றதால் சுவர்கத்திலிருந்து வெளியேற்றம். தடுக்கப்பட்ட பழத்தை சுவைத்ததால்தான் பாலியல் உணர்ச்சி ஏற்பட்டது என எங்கும் கூறப்படவில்லை என்று மறுக்க வேண்டாம். வெட்கத்தலங்களை அறிந்தனர் என்று இறைவன் கூறுவதன் பொருள் என்ன? எனவே இன்று வரை நாம் மேற் கொள்ளும் மணவாழ்க்கை எப்படி சரியாகும்? ...

    என்றும் அன்புடன்

    Dhajjal
    dhajjal666.com.

    ReplyDelete
  6. முஹம்மத்.S. நிஸார்தீன் அவர்களுக்கு,

    விவாதம் துவங்கியவுடன் எனது முதன்மைத்துறை மார்ககத்துறையல்ல நான் மார்க்க அறிஞரல்ல என்கிறீர்கள். வினாக்கள் விழி பிதுங்க வைத்துவிட்டதா?
    எனது முதன்மைத்துறை எனது குடும்பத்திற்கான தேவையை நிறைவேற்றுவதே. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சராசரிக்கும் சற்று குறைவான ஊதியம் பெறும் இயந்திரவியல் பொறியாளன் இது எனது இரண்டாம் துறை. அதன் பிறகே மார்க்கமும் மற்றவைகளும். நேரமின்மையின் கொடுமை என்னைப் போன்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கே தெரியும். பல இடர்பாடுகளை மீறியே தஜ்ஜால் என்ற பெயரில் ஆய்வில் இறங்கினேன்.
    முஹம்மது நபி(ஸல்)–ஆயிஷா(ரலி), முஹம்மது நபி(ஸல்)-ஜைனப்(ரலி) இவ்விவகாரங்களுக்கு பல விதமான மழுப்பல் பதில்களும் சப்பைக்கட்டுகளும் நிறைய உண்டு. எனவே அவைகளைப்பற்றி தற்சமயம் நான் மேலும் விவாதிக்க விரும்பவில்லை. எனவே எல்லாம் அவன் செயல்? என்ற தலைப்பில் 13.03.2009 ல் நான் தங்களுக்கு அனுப்பிய விவாதத்திற்கு மட்டும் கருத்துக்களை கூற மிகத்தாழ்மையுடன் கேட்கிறேன். வழக்கம் போல் உடல் வளர்ச்சி போதாமை, முதிர்ச்சியற்ற அறிவு நிலை என மழுப்பாமல் சிந்தித்து விவாதிக்கவும். அதன் பிறகு அடுத்த முரண்பாடுகளைக் விவாதிக்கலாம்.
    இவ்வகையான கேள்விகள் உங்களுக்கு மிக புதிதென்று நினைக்கிறேன். எனவே நீங்கள் குறிப்பிட்ட மருத்துவர்கள் ஜாகீர் நாயக் மற்றும் ஹபீப் முஹம்மது இருவரிடமும் அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் உதவிக்குக்கு அழைத்துக் கொள்ளுங்கள். தனிமனிதனான இந்த தஜ்ஜாலுக்கு விரைவில் மறுமொழி தாருங்கள். என்னைப் பற்றிய விபரங்கள் தேவை எனில் வெளிப்படையாக கூறவும் நீங்கள் சிரமப்படத் தேவையில்லை அனைத்து விபரங்களையும் நானே தருகிறேன்.


    என்றும் அன்புடன்


    Dhajjal.
    dhajjal666@gmail.com

    ReplyDelete
  7. கேள்விக்கு விளக்கம் கிடைத்த நிலையில் ஒரு மாத இடைவெளியின் பின் மீண்டு வந்து கூறியிருக்கும் கூற்றுகள் உங்களது தடுமாற்ற நிலையை தெளிவாக உணர்த்துகிறது.

    //////////முஹம்மது நபி(ஸல்)–ஆயிஷா(ரலி), முஹம்மது நபி(ஸல்)-ஜைனப்(ரலி) இவ்விவகாரங்களுக்கு பல விதமான மழுப்பல் பதில்களும் சப்பைக்கட்டுகளும் நிறைய உண்டு. எனவே அவைகளைப்பற்றி தற்சமயம் நான் மேலும் விவாதிக்க விரும்பவில்லை.////////


    அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. இறைவனிடம் உங்களது நேர் வழிக்காக இறைஞ்சுவதைத்தவிர வேறெந்த எழுத்துகளும் உங்களை நேர்வழிக்கு அழைக்க துணை நிற்காது என்றே கருதுகிறேன். அதற்கு நேரமொதுக்குவதும் வீணானது என்றே எனது சிற்றறிவு கூறுகிறது. உங்களது கேள்விகள் சிறு பிள்ளைத்தனமானது என்பதை (இறைவனது பண்புகள்?) உங்களைத்தவிர அறிவுள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். ஆதலால் இத்தளத்தில் இக்கேள்விகள் அத்தாட்சிகளாக பாதுகாக்கப்படும். உங்களது இவ்வாறான சில்லறைக் கேள்விகளுக்கு பாடசாலை செல்லும் பத்து வயது முஸ்லிம் மாணவனிடம் விளக்கம் கேட்டு செல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் அவன் தெளிவு படுத்துவான். இத்தளம் சில்லறைக் கேள்விகளுக்காக வடிவமைக்கப்பட்டதல்ல என்பதை அறியத்தருகிறேன். தளத்தின் உள்ளடக்கங்களைப் பதிய விடாது திசை திருப்பும் உங்களது முயற்சியும் நிச்சயம் பலனளிக்காது.

    இறைவன் உள்ளான் என்பதை நீங்கள் உங்களது முந்தைய பதில் மூலமாக பின்வருமாறு ஏற்றுக்கொள்கிறீர்கள்.

    ////ஒருவேளை எட்டாவது வயதிலோ, அதற்கு முன்னரோ அல்லது பிறந்தவுடனோ பருவமடைந்தால் அது இறைவனின் நாட்டமே இதில் தர்கத்திற்கு ஒன்றும் இல்லை என்பது என்னுடைய பதில்.//////

    இனி தலைவாயில் சென்று இத்தளத்தின் நோக்கத்தை படியுங்கள். படித்த பின் நீங்கள் கூறும் இறைவனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கு இத்தளம் நிச்சயம் இணைப்பு தரும். அல்லது நான் பேசியுள்ள தலைப்பின் கீழிருந்து அது குறித்த விமர்சனங்களை பேசுங்கள். இதற்கு மாற்றமாக தலைப்புடன் சம்பந்தமில்லாத விதண்டாவாதங்கள் இனி வருமானால் நீக்கப்படும் என்பதை பகிரங்கமாக அறியத்தருகிறேன்.

    உங்களைபோன்றவர்கள் பொறுக்கியெடுத்து சில நூற்றாண்டுகளாக திரும்பத்திரும்ப கேட்கும் கேள்விகளுக்கான விளக்கங்கள் கீழுள்ள தளத்தில் தொகுத்து தரப்பட்டுள்ளது. என்னாலான உதவியாக அதற்கான தொடுப்பைத்தருகிறேன், தெளிவை பெற்றுக் கொள்ளுங்கள். (எழுத்துரு பிரச்சனையை சீர்செய்யவும்)
    http://www.tamilmuslim.com/Dr.jakirnaik/dr-jakirnaindex1.htm


    /////விவாதம் துவங்கியவுடன் எனது முதன்மைத்துறை மார்ககத்துறையல்ல நான் மார்க்க அறிஞரல்ல என்கிறீர்கள்./////

    இக்கூற்றுக்கள் எங்கிருந்து பெற்றீர்களேன்பதை அறியத்தரவில்லை. நிச்சயமாக எனது தொழிற்துறை மார்க்கமல்ல. இவ்வுலகில் நான் பயணிப்பது இறப்பின் பின் சுவனம் என்ற இலக்கை பெறுவதற்கேயாகும். அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன்.

    இஸ்லாத்தில் மார்க்க அறிஞர்கள் ஏனைய மத அறிஞகளை போல் பிறப்பு வழியாகவோ, ஓட்டெடுப்பு மூலமோ வருவதில்லை நீங்களும் திருக்குர்ஆனையும் முஹம்மத் (ஸல்) அவர்களது வரலாற்றையும் ஆழமாக படித்தீர்களானால் இஸ்லாமிய அறிஞர்தான் ஆனால் உங்களுக்கு எந்த முஸ்லிமும் எந்த முக்கியத்துவமும் தர மாட்டான்; உங்களுக்கு மட்டுமல்ல இஸ்லாம் வளர ஆய்வு செய்யும் அறிவாளிகளுக்கும் எந்த முக்கியத்துவமும் தரமாட்டான். அவ்வாறெனின் இஸ்லாமிய அறிஞ்சர்களின் நோக்கம்? ராஜ போக மரியாதைக்குரிய வாழ்க்கை வாழ்வதல்ல.

    மறுமையும் அங்கு அமையவிருக்கும் முடிவில்லா வாழ்க்கையுமேயாகும்.

    அல்ஹம்துல்லில்லாஹ்.

    அடுத்து உங்களது அறிவுக்கு எட்டாத கேள்விகளையெல்லாம் நான் எனக்குள் கேட்டு மிகத்தெளிவான பதில்களை கொடுத்துள்ளேன். இத் தெளிவை நான் பெற எனக்கு அல்லாஹ்வால் தரப்பட்டது அல்குர்ஆனும் ஹதீஸ்களுமே தவிர மூன்றாவது மனிதனல்ல. உங்கள் முன்னும் இவை இரண்டையும் தருவதே எனது பொறுப்பே தவிர எனது நேரத்தைத்தருவதல்ல.

    எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (குர்ஆன்-17:15)

    அதற்கடுத்த எனது பொறுப்புகளை அல்லாஹ் அழகாக ஒழுங்கமைத்து தந்துள்ளான். ஆதலால் உங்களை ஆட்கொண்டிருக்கும் ஷைத்தான் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் துள்ளிக் குதித்தாலும் உலக மக்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க முனைவேனே தவிர உமது தாளத்துக்கு ஆடப்போவதில்லை.

    "நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (அல்குர்ஆன்-6:68)

    //////////எனவே நீங்கள் குறிப்பிட்ட மருத்துவர்கள் ஜாகீர் நாயக் மற்றும் ஹபீப் முஹம்மது இருவரிடமும் அல்லது வேறு யாரை வேண்டுமானாலும் உதவிக்குக்கு அழைத்துக் கொள்ளுங்கள். தனிமனிதனான இந்த தஜ்ஜாலுக்கு விரைவில் மறுமொழி தாருங்கள்.///////

    இவ்வறை கூவல் என்னிடமே ஒரு மாத காலத்துக்குள் இரண்டாவது முறை என்றால் இத்தனை வருடங்களும் எத்தனை நபர்களிடம் எத்தனை முறை கூவியிருப்பீர்கள் என ஊகிக்க முடிகிறது.

    அல்லாஹ் உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் ஏற்பட வழி செய்வானாக.

    ReplyDelete
  8. தஜ்ஜாலுக்காக இல்லாவிட்டாலும் ஏனைய வாசகர்கள் இறை நம்பிக்கையை உறுதிபடுத்துவதற்காக சில விளக்கங்களை தர முனைகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

    தஜ்ஜால் கற்பனையில் மிதந்திருக்கும் "அலங்காரமிக்க அரசவையில் மன்னர்களுக்கும், மந்திரிகளுக்குமிடையில் நடந்த உரையாடலள்ள" இவைகள். மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத சர்வ வல்லமை மிக்க சக்திக்கும் அதன் படைப்பான உணர்ச்சிகளற்ற, சொந்தமான முடிவெடுக்கத்தெரியாத அடுத்த சக்திக்கும் இடையேயான ஏதோ ஒரு வடிவிலான கருத்து வெளிப்பாடுகள்.

    இதை விளங்க முற்படுவதற்காக நாம் மனிதனின் படைப்பான calculator ஐ உதாரணத்துக் கெடுப்போம். அதற்குள் நடைபெறும் துவித எண் வடிவிலான (Yes, No) உரையாடலே துல்லியமான விடைகளை எமக்கு தர துணை புரிகிறது. சிந்தனைக்கு எட்டக்கூடிய, கண்ணுக்கு புலப்படக்கூடிய மனித படைப்பிற்குள் இடம்பெறும் இவ்வாறான உரையாடலே எமது அறிவிற்குள் நுழைய மறுக்கின்றபோது, எமது அறிவினால் யூகிக்க முடியாத எம்மை படைத்தவனது உரையாடலை எமது அறிவிற்குள் கொண்டு வர முனைகின்ற போது இவ்வாறான முட்டாள்த்தனமான கேள்விகள் தோன்ற வாய்ப்புகள் உண்டே.

    இங்கு உரையாடலின் கருத்துகளை நோக்கும் சக்தியே எமக்கிருக்கிறது. "இறைவனின் கணிப்பு" "மலக்குகளின் கணிப்பு" என்பதற்கே இடமில்லை.

    சாதாரண மனிதர்களான எம்மிடமே தனது கருத்துகளை திருக்குர்ஆன் மூலமாக கூறும் அல்லாஹ், மேலும் அவனது தூதர்கள் மூலம் அவனை நோக்கி பல கேள்விகளை கேட்க்கச்செய்து விளக்கமளித்த அல்லாஹ், மலக்குகளிடம் உரையாடியதில் அதிசயம் ஏதும் இல்லை.

    இவ்வுரையாடலில் மலக்குகளை நோக்கிய இறைவனது இறுதி கூற்றுக்கள் அவர்களிடம் கருத்தை பெறுவதற்காக கூறப்படவில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

    "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" 2:30


    ஆக மலக்குகளே அறியாத விடயத்தை நாம் அறிய வேண்டிய அவசியம் இல்லை. மனித படைப்பு பற்றி நோக்குவோம். இத்தலைப்பு அழகாக விளக்கப்படுத்த வேண்டிய விடயம் மிகப் பெரிய தலைப்பாகும். மனித ஆன்மாக்கள்(ரூஹ் ) (உங்களது ஒருமை, பன்மை) அனைத்தையும் ஒரே தவணையில் அல்லாஹ் படைத்து விட்டான். அவ்வான்மாக்களுக்கு அல்லாஹ் உருவம் கொடுப்பதே கருவறையில் ஆகும். உருவம் கொடுத்த கருவறையிலும் கூட சுயமாக எமக்கு தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இல்லை. மரணத்திற்கு பின்னும் எம்மால் சுயமாக இயங்க முடியாது. ஆக உலகிலுள்ள பிறப்பு முதல் இறப்பு வரையுமான காலமே அவனை சோதிப்பதற்காக சொந்த அறிவினால் தீர்மானம் எடுக்கும் உரிமையை அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ளான். இதையே மலக்குகளிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறான்.

    "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" 2:30

    மேலும் மனித படைப்பு பற்றிக் கூறும் அவன்

    அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(76.2)

    "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)"

    எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (குர்ஆன்-17:15)



    மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது. தெளிவான பேரொளியையும்(திருக்குர்ஆன்) உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.(4:174)

    இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். 24:52


    ஆக இறைவனது அத்தாட்சிகளை அவனது பண்புகளிலிருந்து தேட முடியாது. அவனது படைப்புகளிலிருந்தும் அவனால் அருளப்பட்ட திருக் குர் ஆனில் இருந்தும் அவனது இறுதித்தூதரிலிருந்துமே தேட வேண்டும். அறிவுக்கு அல்லாஹ் எடுத்துக் கூறியுள்ள விடயங்களைத் தவிர பிறப்பிற்கு முன்னுள்ள நிலை பற்றியோ மரணத்திற்கு பின்னுள்ள நிலை பற்றியோ மனிதர்கள் அறிய மாட்டார்கள். ஏன் அல்லாஹ்வின் இறைத்தூதர்கள் கூட அறிய மாட்டார்கள் என்பதை பின்வரும் இறைவசனம் கூறுகிறது.

    (நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" ௬:௫௦

    (நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!" 18:109

    யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  9. கேள்விகளுக்கான தனித்தனி விளக்கங்கள்.

    /////////////இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற இறைவனால் படைக்கப்பெற்ற மலக்குகளிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன?.///////////////

    சாதாரண மனிதர்களான எம்மிடமே தனது கருத்துகளை திருக்குர்ஆன் மூலமாக கூறும் அல்லாஹ், மேலும் அவனது தூதர்கள் மூலம் அவனை நோக்கி பல கேள்விகளை கேட்க்கச்செய்து விளக்கமளித்த அல்லாஹ், மலக்குகளிடம் உரையாடியதில் அதிசயம் ஏதும் இல்லை.

    /////////////“நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?”///////////

    இது தெளிவுபடுத்தக்கூறுவதா? முரண்படும் கருத்தா? என்பதை அறிவுடையவர்கள் அறியட்டும்.

    ///////////மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இங்கு இறைவன் மனிதனைப் படைக்க இருப்பதாக மட்டுமே தெரிவிக்கிறான். இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?.////////////
    /////////வானவர்களுக்கு கிடைத்த ஒரே செய்தி இறைவன், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!.////////////'

    திருக்குர் ஆன் உங்களது பொழுது போக்குக்காக கதைகள் கூறும் சுவாரசியமான , விரிவான நாவல் அல்ல. அத்தாட்ச்சிகளை அடையாளப்படுத்தி நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிக்கும் வேதம். அதில் உரையாடல்களிலும் வரலாறுகளிலும் சிலவே கூறப்பட்டுள்ளன.

    (நபியே!) நீர் கூறும்; "என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; "நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்" என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை." இன்னும் நீர் கூறும்; "குருடனும் பார்வையுடைவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" ௬:௫௦

    (நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!" 18:109


    //////////////மலக்குகள் மற்றும் ஜின் இனங்களின் பகுத்தறிந்து செயல்படும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. முன்பு வாதிட்ட முறையைப் போல இறைவனின் விருப்பத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு நிகழ்வும் நடைபெறுகிறது வாதிட்டால், மலக்குகள் வழிபடும் இயந்திரம் என பொருள் விளங்க நேரிடும், அவர்களின் தூய்மை பொருளற்று வேடிக்கையாகி விடும்////////////

    எந்த விதமான கருத்து வேறுபாடுமின்றி நிச்சயமாக உமது பாஷையில் "வழிபடும் இயந்திரமே மலக்குகள். அவர்களுக்கு கற்பனையில் உருவம் கொடுத்து தூய்மை படுத்தும் வழிகேடு எதனையும் புதிதாக நீங்க ள் இஸ்லாத்தில் ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஜின்கள் மனிதர்களைப்போலவே சுயமாக சிந்திக்கும் ஆற்றலுள்ளவைகள். இப்லீஸும் ஜின் இனத்தைச் சார்ந்தவனே. இப்லீஸின் செயற்பாடுகளுக்கு அல்லாஹ்வே அனுமதி கொடுக்கிறான். அதன் பின்னரே அவன் மனிதர்களை வழிகெடுக்கும் உரிமை பெறுகிறான். இவைகளனைத்தும் இறைவனது ஏற்பாடுகளென்பதையும் மற்றவர்கள் அதையரியமாட்டார்கள் என்பதையும் இறைவன் விளக்குகிறான்.

    அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.(2:30)
    அத்தியாயம் 07 வசனங்கள் 14 முதல் 16 வரையும்.
    (இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (7:14)(அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான். (7:15)(அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.(7:16)

    மற்றவைகள் "கலாகத்ர்" விதியுடன் சம்பந்தப்பட்டவைகள்.
    எதிர்காலம் உட்பட சகலதையும் பார்க்கும் சர்வ வல்லமையுள்ள கற்பனைக்கு புலப்படாத சக்தியே இறைசக்தி. அதனையே அல்லாஹ் என்கிறோம். காரணங்கள் மூலமே காரியங்கள் நடைபெறவேண்டும் என்பதே அல்லாஹ்வின் விதி. இவ்விதியையும் மனிதனது "அறிவு சுதந்திரத்தையும்", ஐயும் பந்தி பந்தியாக விளக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சில திருக்குர்ஆன் வசனங்களே போதுமான சாட்சியாக இருக்கின்றன.
    "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)"

    எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (குர்ஆன்-17:15)
    மனிதனுக்கு இறைவன் பிரத்தியேகமாக வழங்கியுள்ள அறிவினால் அவன் தீர்மானமெடுக்கும் உரிமையை பெறுகின்றான். (ஜின்களின் தலைவனான இப்லீசைப் போல) அவவுரிமையைக் கொண்டே அவனை நரகிற்கும் சுவனத்திற்கும் அல்லாஹ் நுழையச்செய்கிறான். மலக்குகள் சுயமாக சிந்திக்கும் ஆற்றளுள்ளவர்களல்ல அல்லாஹ் கூறுவதை செயற்படுத்துபவர்கள் மட்டுமே.

    ReplyDelete
  10. "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது(உலக நியதிகள் மனிதர்களின் நலனுக்கானதே).இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது (உனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு அதனை பிரயோசனப்படுத்தவும் பாழாக்கவும் செய்கிறது). (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)"

    இவ்வறிவைக்கொண்டு இறையத்தாட்ச்சிகளை தேடுங்கள் தெளிவான நம்பிக்கைக்கொளுங்கள். காரணம், தொடரப்போகும் முடிவில்லா வாழ்க்கைக்குறித்து ஒரு புறம் நடுங்கச்செய்யும் எச்சரிக்கைகளையும், மறுபுறம் இவ்வுலகில் காணும் எந்த உச்சசுகத்துடனும் ஒப்பிட முடியாத இன்பகரமான வாழ்க்கையையும் அல்லாஹ் தெளிவாக அறியத்தந்துள்ளான். சொற்ப காலங்களே வாழ்ந்து மரணிக்கப்போகும் இவ்வாழ்க்கை சுகத்துக்காக கோடியாண்டுகளானாலும் முடிவு பெறாது நிலைத்து நிற்கப்போகும் வாழ்க்கையை பறிகொடுத்து விட வேண்டாம். சிந்தியுங்கள் அல்லாஹ் நேர்வழி காட்டுவான். சிந்தனைய தூண்டுவதே இத்தளத்தின் நோக்கம். அத்தாட்சிகளை வெளிக்கொண்டு வருவதே இத்தளத்தின் நோக்கம். முடிவுகளை தருவதல்ல. இத்தள "தலைவாயிலில்" காட்டப்பட்டுள்ள உப தளங்களின் முதன்மை பக்கங்களை மட்டுமாவது ஆய்வு செய்ய முயலுங்கள்.
    யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்வே.
    அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  11. *** இறைவனை தேடி ஓர் அறிவியல் பயணம்.
    கேள்விகளே இனி இல்லையென்ற நிலை வரும் வரையும் மதங்கள் தொடர்பில் ஆய்வை தொடர்வது மனிதர்கள் ஒவ்வொருவரதும் கடமை என்பதாக கருதுங்கள்.***
    இதற்கும் என்னுடைய சந்தேகங்களுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?
    ***இவ்வாறே அடுத்த பெரும் மேதையான கலிலியோ கலிலி "உலகம் உருண்டை" என்ற வாதத்தை முன் வைத்ததற்காக அவர் பெற்ற மரண தண்டனையும் இதற்கு ஆதாரமாக கூறலாம்***
    அவர்க்கு மரணதண்னை வழங்கியது சிந்திக்க மறுத்த ஆன்மீகவாதிகள் என்பதை மறைத்தது ஏன்?
    *** நிச்சயம் கேள்வி எழ வேண்டும். எழுவதே அறிவுக்கழகு. ஆம், விஞ்ஞானத்தால் நிரூபிக்க திறனற்றிருப்பவைகள் குறித்து கேள்வி மேல் கேள்விகள் தொடுத்து அவற்றை பகுத்தறிவின் துணை கொண்டு நிறுவும் முயற்சிகளை தொடர வேண்டும். ஆம் புலனறிவுகள் பகுத்தறிவைத்தூண்ட எமக்கு நாமே வழி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது சிந்தனைக்கு நாமாகவே எல்லைக்கோடிடாமல் சிந்தனையை விரியச்செய்ய வேண்டும். அதன் போதே அறிவியல் பூரணமாகும், செய்யாது நிற்பின் அதுவே அடிப்படைவாதமாய் அடையாளப்படுத்தப்படும்.***
    3. அவ்வாறு கேள்வி மேல் கேள்விகள் தொடுத்து அவற்றை பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்ததாலே இன்று அறிவியல் உலகம் மாற்று கருத்தில்லாமல் அல்பேர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) அங்கீகரித்தது. இந்த நடைமுறையை ஏன் ஆன்மீகவாதிகள் தங்களுடைய கோட்பாடுகளில் செயல்படுத்தவில்லை?
    ஏனென்றால் ***அறிவை பெறுவதில் தமக்கென சுயமான எல்லைக்கோட்டை வரைந்து அதற்கு வெளியே சிந்திக்க மறுக்கின்ற கூட்டத்தையே அடிப்படை வாதிகள் (fundamentalist) என்ற பதம் குறிக்கின்றது.***
    ***-விஞ்ஞானம்-
    தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால்,
    அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால்
    அதுவே உலகின் மிகப்பெரும் புதிராய் இருந்தாலும் சரியே அது பற்றி சிந்திப்பதே வீண் வேலை எனக்கருதுகிறது விஞ்ஞானம்.
    சிந்தனைக்கு வரையறை இடும் இவ்வாதம்
    அறிவியல்வாதமா?
    அடிப்படைவாதமா?***

    4. தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால், அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்ததால் மேலும் சக்திவாய்ந்த கருவிகளை உருவாக்கி விடைதேடுவதே சிறந்த விஞ்ஞானம். அவ்வாறு மனிதன் பகுத்தறிவினால் முயன்றதன் விளைவே இன்றைய அறிவியல் வளர்ச்சி. இது எல்லோரும் அறிந்த உண்மை நீங்கள் மட்டும் எப்படி தலைகீழாக பொருள் உணர்ந்தீர்கள் என்று புரியவில்லை.

    *** …இச்செய்திகளைத் தந்தவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தின் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அஞ்சாது துணிந்து எழுந்து தமது உலக வாழ்வையும் உயிரையும் துச்சமென கருதியே எம்மிடம் சமர்பித்துள்ளனர்.
    இவ்வுலகில் அவர்களுக்கு எந்த பயனும் பெற்றுத்தராத ஒரு செயலை, பெரும் சமூக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தமது நிம்மதியிழந்து ஏன் செய்தனர்? இந்த ஒரு காரணம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்ததாக கூறி வாதங்களை முன் வைத்தவர்களை நாம் அணு அணுவாக ஆராய வேண்டும் என்பதை உணர்த்த போதுமானதல்லவா?***
    5. அவ்வாறு எம்மிடம் சமர்பித்துள்ள செய்திகளின் துணையுடன் இறைவனை அணு அணுவாக ஆராய முற்படும் வேளையில் கிடைத்த சில கருத்துக்களே தங்களுடைய தளத்தில் வைக்கப்பட்ட “எல்லாம் அவன் செயல்?” இக் கட்டுரை தங்களின் தலைப்பிற்கு சிறிதும் பொருந்தவில்லை, நீக்கப்படும் என உளறியிருக்கிறீர்கள். (நீக்கலாம் - எனக்கு விளம்பர மோகமில்லை).
    இவ்வாய்வும் அறிவியலின் மறு பகுதியல்லவா?
    அதைக்கடந்தும் சிந்திக்கவேண்டிய பெரும் பகுதி உள்ளதையும் ஏன் உங்களது ஆன்மீக அறிவு உணரத்தவறியது?
    ***மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றிய அச்சமே இறைவனை பற்றிய ஆய்விற்கு உட்படுத்துகிறது.***
    6. என் நிலையும் நிச்சயமாக அதுதான்.
    *** அவ் இறைவனை புலனுறுப்புகளால் நிச்சயமாக காண முடியாது.
    இவ்வாறு புலனுறுப்புகளுக்கு தென்படாது இப்பிரபஞ்சத்தில் மறைந்திருக்க மர்மங்களே இல்லை என்ற வாதம் அறிவீனம். தினந்தோறும் புதுப்புது மர்மங்கள் அவிழ்க்கப்பட்டே வருகின்றன.***
    7. யாருடைய எந்த புலனுறுப்புகளுக்கும் எவ்வகையிலும் எந்தக்காலத்திலும் தென்படவே மாட்டேன் என யாரிடமாவது சத்தியமிட்டு கூறியிருக்கிறானா? என்னைக் காணும் சக்தி மனிதனுக்கு இல்லை என்று மட்டுமே தகவல் உள்ளது. தன்னைக் காணும் சக்தி மனிதனுக்கு அளிக்கவே மாட்டேன்என்று கூறியுள்ளானா?
    ஏன் என்ற பகுத்தறிவின் தேடலின் விளைவே அவைகள். முடியாது என நினைத்திருந்தால் முஹம்மது என்ற மனிதருடன் இஸ்லாம் முடிந்திருக்கும்.. முடியாது என அவர் நினைத்திருந்தால் அவர் ஒரே மனைவியுடன்அவர் காலமும் முடிந்திருக்கும். என்னுடைய இந்த விவாதததிற்கும் இடமிருந்திருக்காது. (இப்படி இன்னும் நிறைய கூறலாம்!)
    ***ஆஸ்திகத்தை நிரூபிக்க இறை வழிகாட்டல் உண்டு (ஒரே இறைவன் உள்ளான் என்பதை முஹம்மத்(ஸல் அவர்கள் சமர்ப்பித்த கோட்பாடுகளை கொண்டு 100% ஒவ்வொருவரது பகுத்தறிவும் சரி என காணும் வரையும், இனி மாற்று கேள்விகளே இல்லை என்ற நிலைக்கு நீங்கள் வரும் வரையும் இறைவனது துணை கொண்டு நிரூபிப்பேன் என உறுதி தருகிறேன்.***
    8. உறுதிதவறியது ஏன்?
    இன்னும் வரும்...
    மீண்டும் சிந்திப்போம்

    அன்புடன்

    தஜ்ஜால்

    ReplyDelete
  12. இவருக்கான விளக்கங்கள் நான்கு பந்திகளில்

    March 17, 2009 2:15 PM

    அடுத்து

    March 19, 2009 5:41 AM

    March 19, 2009 5:42 AM

    March 19, 2009 6:08 AM

    விளங்குவதற்கு இலகுவாக, இன்னும் தேடலில் ஆர்வமுள்ளவர்களுக்கு மேலதிகத் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளதை கவனிக்காது மேலோட்டப்பார்வையில் இக்கருத்துகளை முன்வைத்துள்ளார். கடைசியாக அவர் வைத்துள்ள கேள்விகளுக்கான விளக்கங்கள் அடுத்தப் பக்கத்துக்கு வழி மாற்றப்படுகிறது.

    கீழ்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.
    plaese COPY it to PASTE.

    http://op-islam.blogspot.com/2009/02/blog-post_336.html

    ReplyDelete
  13. முஹம்மத்.S. நிஸார்தீன் அவர்களுக்கு,
    வாழ்க வளமுடன்!

    நீங்கள் அறிவு பெறும் பொருட்டு தன் அத்தாட்சிகளையும் அவன் உங்களுக்குக் காட்டுகிறான்(2:73)

    உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (இவ்வாறிருக்கும் போது) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விடயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள். (திருக் குர்ஆன்-3:66)

    இதைத் தான் நானும் சொல்கிறேன். ஞானம் இல்லாத விசய‌ங்களை தர்க்கம் செய்ய வேண்டாம். கால‌த்துக்கு காலம் அனைத்தும் மாறுபடும். தேடல் உள்ள எல்லோருக்கும் பாதை வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம், சேரும் இடம் ஒன்று தான்.
    அனைத்து மதத்தை உருவாக்கியவர்களும் சொன்ன விசயம் ஒன்று தான், ஞானம் அடைய பாதை காட்டினார்கள். புத்தர், நபிகள், ஏசு, ஆதிசங்கரர் இவ்வாறு அனைவரும் சொன்ன விசயங்கள் ஒன்று தான். அவர்களுக்கு தெரிந்த மொழியில் சொன்னார்கள். எடுத்துக்கொண்டவர்களே அதை தனித் தனி மத‌மாக்கி விட்டார்கள். விவாதம் தேவையில்லை.....

    ReplyDelete